Load Image
Advertisement

பொதுமக்கள் புகார் அளிக்க ஊராட்சி மணி மையம்

Tamil Nadu Govt: Municipal Bell center for public complaints     பொதுமக்கள் புகார் அளிக்க   ஊராட்சி மணி மையம்
ADVERTISEMENT
சென்னை,-கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க, பிரத்யேக எண்ணுடன் செயல்படும், 'ஊராட்சி மணி' என்ற, தொடர்பு மையம் துவக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வசிப்போர், அடிப்படை வசதி குறைபாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, ஒருங்கிணைந்த வசதி ஏற்கனவே உள்ளது. ஆனால், ஊராட்சிகளில் வசிப்போர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தான், குறைகளை பதிவு செய்ய வேண்டும். தொலைதுாரங்களில் வசிப்போர், புகார் தெரிவிக்க ஒன்றிய அலுவலகம் வர சிரமப்படுகின்றனர்.

இதனால், ஊராட்சிகளிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க, பிரத்யேக மையம் ஏற்படுத்தப்படும் என, அரசு அறிவித்து இருந்தது.

இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்குனர் பா.பொன்னையா பிறப்பித்துள்ள உத்தரவு:

'ஊராட்சி மணி' என்ற பெயரில், புகார் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '155340' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இந்த மையம் நாளை துவக்கப்பட உள்ளது.

இதில், பெறப்படும் புகார்கள், அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, மாவட்ட வாரியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (4)

  • ganesha - tamilnadu,இந்தியா

    அது சரி. புகாரை எப்போ சரிபண்ணி வீங்க

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    தொகுதி கொளத்தூர் அங்கே ஒரு மணி கட்ட சொல்லுங்கள்.....

  • ராஜா -

    இங்கே சென்னையில் கழிவு நீர் ஆறாக வீதியில் ஓடுகிறது. இதற்கு எதற்கு மணி, கினி எல்லாம். அந்தந்த ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு கண் தெரியாதா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    எல்லையில்லா காமடி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் ஒருவராலும் தடுக்க முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்