Load Image
Advertisement

பார்லிமென்டில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டினை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்

 Opposition parties should support 33 percent reservation for women in Parliament    பார்லிமென்டில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டினை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்
ADVERTISEMENT

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:பார்லிமென்டில் வரலாற்று சிறப்பு மிக்க, மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல், மகளிருக்கு உரிமையை, அங்கீகாரத்தை, பகிர்ந்தளிப்பதாக பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் யாருமே இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலையே... அப்புறம் இவரு, எந்த எதிர்க்கட்சிக்கு கோரிக்கை விடுக்கிறாரு?

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:தமிழக மின் வாரியம் நடத்திய, 'கேங்மேன்' தேர்வில், தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும், 5,000க்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழனிசாமி ஆட்சியில் தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் பணி நியமனம் செய்வதாக, தி.மு.க., வாக்குறுதி அளித்தது; எனினும், செய்யவில்லை. எனவே, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'தி.மு.க., அரசு, 99 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டது'ன்னு முதல்வர் சொன்னாலும், சொன்னார்... எல்லா தரப்பிலும் இப்படி போராட்டம் வெடிக்குதே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:தமிழகத்தில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுகலை படிப்புகளுக்கு, 'டான்செட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 'கட் - ஆப்' பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் தவிர, மீத இடங்களுக்கு, 'ஜீரோ' சதவீதம் மட்டுமல்ல... சில நேரங்களில், 'மைனஸ்' மதிப்பெண் பெற்றவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இது, முதல்வருக்கு தெரியாது என நினைக்கிறேன். எனவே, 'நீட்' தேர்வை எதிர்க்க, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்ப்பது முறையல்ல.

உயர் கல்வித் துறை அமைச்சர் இந்த விபரத்தை, முதல்வருக்கு சொல்லி இருக்க மாட்டாரோ, என்னமோ?

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி:இந்தியா - இலங்கை உறவை மேம்படுத்தும் முயற்சியாக, 1960ல் நிறுத்தப்பட்ட, நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே படகு சேவையை, பிரதமர் மோடி மீண்டும் துவக்க இருக்கிறார். இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தை, மத்திய அரசு, 300 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்துள்ளது. இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின், 150 பேர் பயணிக்க கூடிய அதிவேக பயணியர் படகு, முதல் பயணத்தை, அக்டோபர் முதல் வாரம் துவக்க இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

அகதிகளை தனுஷ்கோடி அழைத்து வந்து, நல்லா, 'கல்லா' கட்டிய இலங்கை படகோட்டிகளுக்கு இனி பெரும் இழப்பு தான்!வாசகர் கருத்து (1)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    படகுப்போக்குவரத்து வர்தகத்தை அதிகரிக்கும் அதே சமயத்தில் தங்கக்கடத்தல், இரண்டு பக்கத்திலிருந்தும் போதை மருந்து கடத்தல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்