2 ரயில்கள் மோதி விபத்து பாக்.,கில் 31 பேர் காயம்
லாகூர்-பாகிஸ்தானில், நின்றிருந்த சரக்கு ரயில் மீது, பயணியர் ரயில் மோதியதில், 31 பேர் காயம் அடைந்தனர்.
நம் அண்டைநாடான பாக்.,கின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாரி நகரில் இருந்து, லாகூர் நோக்கி பயணியர் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ஷெய்குபுரா மாவட்டத்தின் கியூலா சத்தார் ஷா ரயில் நிலையம் அருகே சென்றபோது, அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து, பயணியர் ரயில் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.
கடைசி நேரத்தில் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாத நிலையில், சரக்கு ரயில் மீது பயணியர் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 31 பயணியர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டனர். ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து, 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!