அறிவியல் ஆயிரம்: ரத்தத்தின் முக்கியத்துவம்
அறிவியல் ஆயிரம்
ரத்தத்தின் முக்கியத்துவம்
ரத்ததானம் செய்யும் போது, உடலின் குறிப்பிட்ட பகுதியிலிருந்து மட்டும் ரத்தம் செல்லாது. ஏனெனில் ரத்தம் என்பது உடலில் சுற்றும்படியான அமைப்பில் உள்ளது. மூளை, இதயம், கணையம் உள்ளிட்டவை உடல் உறுப்புகள். அதுபோல திரவ வடிவ உறுப்புதான் ரத்தம். முக்கியமாக சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத் தட்டுகள் எனும் மூன்று பொருட்களை பிளாஸ்மா திரவத்தில் அடக்கிய ஒரு உறுப்புதான் ரத்தம். நம் உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருந்தாலும், ரத்த தானம் செய்யும்போது, வெறும் 250 மி.லி. - 350 மி.லி. ரத்தம் மட்டுமே பெறப்படும்.
தகவல் சுரங்கம்
மருந்தாளுநர் தினம்
மக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருத்துவ துறைக்கு உதவிகரமாக இருப்பவர்கள் மருந்தாளுநர்கள். இவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக செப். 25ல் உலக மருந்தாளுநர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. 'சுகாதார கட்டமைப்பை பார்மசி வலுப்படுத்துகிறது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 40 லட்சம் பார்மசிஸ்ட்கள் (மருந்தாளுநர்) உள்ளனர். இதில் 78 சதவீதம் பேர் பெண்கள். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு சரியான முறையில் வழங்குவது மருந்தாளுநர்களின் பணி.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!