Load Image
Advertisement

கேரளாவில் "இண்டியா" கூட்டணிக்கு பின்னடைவா?: காங்.,யை விளாசிய பினராயி விஜயன்

Backlash to "India" coalition in Kerala?: Pinarayan Vijayan blasts Congress    கேரளாவில் "இண்டியா" கூட்டணிக்கு பின்னடைவா?: காங்.,யை விளாசிய பினராயி விஜயன்
ADVERTISEMENT
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நற்பெயர்களை களங்கம் விளைவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டி உள்ளார். இதனால் கேரளாவில் "இண்டியா" கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களின் நற்பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரின் மனைவி குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஒரு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது போன்று சமூகவலைதளத்தில் தனிநபர் மீது தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம்.

கேரளாவில் மக்கள் செல்வாக்கை பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை காங்கிரஸ் செலவு செய்யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்க, லட்சக்கணக்கில் செலவு செய்து காங்கிரஸ் அவதூறு பரப்புகிறது.

கடந்த முறை சட்டசபைத் தேர்தலில் அவர்கள் தோல்வி அடைந்தனர். வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற அவதூறுகளை பரப்ப தயாராக உள்ளனர். சமூக ஊடகங்கள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அதைப் பயன்படுத்தும் போது நாம் நமது நாகரிகத்தை இழக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் "இண்டியா" கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மனைவி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் அபின் கோடங்காரா(வயது 26) என்பவரை கேரள போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (6)

  • Sanghi - Thirukkuvalai,இந்தியா

    என்னவோ மற்ற இடங்களில் முன்னடைவு போல... எந்த மாநில கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கான்+க்ராஸ்-ற்கு தாரைவார்த்து இழப்புகளை சந்திக்க விழையாது. கட்டெறும்பு தேய்ந்து கொசுவாகும்.

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளே அந்த தொடப்பக்கட்டை காரன் உள்ளே விட மாட்டான் மேற்கு வங்கத்தில் அந்த அம்மையார் உள்ளே விட மாட்டார் கர்நாடக காங்கிரஸ் காரன் உள்ளே விடமாட்டான் நமது தமிழ்நாட்டில் நமது திராவிட மாடல் உள்ளே விடமாட்டான்..........அப்போ எங்கே தான் இந்த கூட்டணி ????????

  • M Ramachandran - Chennai,இந்தியா

    கொள்கை ராகுலு. மனம் ரோஷம் உள்ளதா முக்காடு போட்டு கொண்டு எங்கே என்று விழித்து கொண்டு கேரளாவில் சுத்த வேண்டும்

  • ஆரூர் ரங் -

    ஊழல் பற்றி விசாரித்த சமூக செயற்பட்டாளர் மர்ம மரணம். 🤥

  • duruvasar - indraprastham,இந்தியா

    குறிப்பாக அண்ணாமலையைப்பற்றியும். கேவலமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். முதலில் உங்க தமிழக சகாவுக்களுக்கு உங்கள் அறிவுரையை கொடுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்