Load Image
Advertisement

சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் துவங்கியது: தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று(செப்.,24) காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனால் தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Latest Tamil News


சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்படும், 'வந்தே பாரத்' ரயில்கள், பயணியரிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதுவரையில், 31 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 26 ரயில்கள், பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

9 வந்தே பாரத் ரயில் சேவை

அடுத்த கட்டமாக, நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில், ஒன்பது, 'வந்தே பாரத்' ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி இன்று(செப்., 24) டில்லியில் இருந்து காணொலி வாயிலாக துவங்கி வைத்தார். திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ., தலைவர்கள் கல்நது கொண்டனர்.

Latest Tamil News

தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சென்னை- திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கியதால், தென் மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'ஏசி சேர் கார்' கட்டணம் 1,700 ரூபாய். உணவு இல்லாமல், 1,355 ரூபாய் கட்டணமும், சொகுசு பெட்டியில் ஒருவருக்கு, 3,090 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, நேற்று முன்தினம் இரவில் துவங்கியது. குறிப்பாக, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் பயணிக்க, பொது மக்கள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தனர்.

9 வழி தடங்கள் எங்கே தெரியுமா?

1. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர்- உதய்பூர்

2. சென்னை- திருநெல்வேலி

3. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

4. விஜயவாடா - சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

Latest Tamil News

5. பாட்னா - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

6. கேரளா மாநிலம் காசர்கோடு - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

7. ரூர்கேலா - புவனேஸ்வர் - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

8. ராஞ்சி - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

9. ஜாம்நகர்- ஆகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.


நம்பிக்கை

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே பாரத் ரயில்களில் 1.11 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். சந்திரயான்-3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியது.
ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி மூலம் இந்தியாவில் ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.


பெண்கள் தலைமையிலான நமது வளர்ச்சியை உலகம் பாராட்டியுள்ளது. இந்த தொலைநோக்கு பார்வையை மேம்படுத்தவே மகளிர் இட ஒதுக்கீடு அரசு கொண்டு வந்தது. இதனால் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.வளர்ச்சி

மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ.,வின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் ரயில்வே துறை வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (14)

 • Krishnakum - Chennai,இந்தியா

  கன்னியாகுமரி வரைக்கும் நீட்டித்தால் நன்றாக இருக்கும்...

 • Sivagiri - chennai,இந்தியா

  சாதரண மக்கள் சென்று வரக் கூடிய வைகை ரயில் போல - நெல்லைக்கு தாமிரபரணி எக்ஸ்ப்ரஸ் விட்டால்தான் உண்மையிலேயே மக்கள் சந்தோஷப் படுவார்கள் - இப்போது தனியார் ஆம்னி பேருந்துகளில் சந்தோஷமாக கட்டணத்தை உயர்த்துவார்கள் - ஆனால் ஒரு ப்ரயோஜனம் , மக்கள் சென்னை நோக்கி படையெடுப்பது குறையும் - ?

 • Sivagiri - chennai,இந்தியா

  ஆமா - ரொம்ப சந்தோஷம்ல - ? - தெற்கே இருந்து தினமும் - 40000-50000- பேர் - சாதாரண கட்டணம் கூட எடுக்க முடியாமல் - பிழைப்புக்காக சென்னை - கோவை - பெங்களூரு - மும்பயி - ஆந்திரா - கோல்கத்தா - ன்னு - போயி வர்ராங்க - இதுல இந்த 500 பேர் மட்டுமே போயி வர ட்ரெயினால ரொம்ப சந்தோஷமாக்கும் - இதுல சாப்பாடு 350-ரூபாயாம் - தண்ணீர் - காசு தனியா ? - சாதாரண மக்கள் பயன்படுத்தும் வைகை போன்ற ரயில்கள் - அதிகரிக்க வேண்டும் - ஏழை பணக்காரன் வித்தியாசத்தை காட்டும் கரீப் ரத் , அந்த்யோதயா - என்ற பெயர்களை நீக்க வேண்டும் -

 • M Ramachandran - Chennai,இந்தியா

  thee மு க்கா விற்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்ன சம்பந்தம்? ஸ்டிக்கர் ஓட்ட முயற்சியா

 • M Ramachandran - Chennai,இந்தியா

  பெட்டிகள் எண்ணிக்கையய் 12. ஆகா உயர்த்த வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement