Load Image
Advertisement

கூட்டணிக்கு ‛இண்டியா பெயர் ஏன்? ராகுல் விளக்கம்

 Why is the alliance named India? Rahul explained   கூட்டணிக்கு ‛இண்டியா பெயர் ஏன்? ராகுல் விளக்கம்
ADVERTISEMENT
புதுடில்லி:‛‛ நாங்கள் இந்திய மாநிலங்களுக்காக போராடுகிறோம். இந்தியா என்ற கொள்கைக்காக போராடுகிறோம். இதனால் தான் எங்கள் கூட்டணிக்கு ‛இண்டியா' என்ற பெயரை சூட்டினோம்'' என ராகுல் கூறியுள்ளார்.

புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற இருக்கிறோம். ம.பி., சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம். ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலிலும் வெற்றிக்கு அருகில் இருக்கிறோம். அங்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். கர்நாடக தேர்தலில் முக்கிய பாடத்தை கற்றுள்ளோம். எங்களின் திட்டங்களை சொல்ல அனுமதிக்காமல், மக்களை திசை திருப்பி பாஜ வெற்றி பெற்றதை கண்டுபிடித்தோம். இதனால், பா.ஜ.,வின் கதைகளை சொல்ல அனுமதிக்காமல், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றோம்.

எதிர்க்கட்சிகளை ஆதரித்தால் என்ன நடக்கும் என்பதை இந்தியாவில் உள்ள எந்த தொழிலதிபரிடமும் கேட்டுப் பாருங்கள். எந்த எதிர்க்கட்சிக்காவது, செக் கொடுத்தால் என்ன நடக்கும் என அவர்களிடம் கேளுங்கள்.இதனால், நாங்கள் நிதி மற்றும் மீடியா ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் ஒரு அரசியல் கட்சிக்கு எதிராக போராடவில்லை. இந்திய மாநிலங்களுக்காக போராடுகிறோம். இந்தியா என்ற கொள்கைக்காக போராடுகிறோம். இதனால் தான் எங்கள் கூட்டணிக்கு ‛இண்டியா' என்ற பெயரை சூட்டினோம்.

சொத்தில் சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நோக்கிய பாரபட்சம் ஆகியவை இந்தியாவில் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஆனால், இதனை பற்றி பாஜ.,வால் பேச முடியாது. அவர்கள் நாட்டின் பெயரை மாற்றட்டும். இதுவும் ஒரு வகையான திசை திருப்பும் நடவடிக்கை தான். இதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், அதனை செய்ய அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு ராகுல் பேசினார்.


வாசகர் கருத்து (22)

  • ramani - dharmaapuri,இந்தியா

    முதலில் டெபாசிட் வாங்க முயற்சி செய். எப்படியிருந்தாலும் காங்கிரஸ் தோற்பது உறுதி. பப்பு எழுதிக் கொள்ளட்டும். புள்ளி ராஜாக்கள் தோற்பது உறுதி உறுதி.

  • Sanghi - Thirukkuvalai,இந்தியா

    மக்கள் தேசபக்தியுடன் ஏமாந்து வாக்களித்துவிடுவார்கள் என்ற குருட்டு நம்பிக்கைதான் காரணம். மண்ணை கவ்வுவார்கள்

  • பேசும் தமிழன் -

    பப்பு ....காந்தி என்ற பெயரை போலியாக பயன்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்றி வருவது ஏன்???

  • பேசும் தமிழன் -

    புள்ளி வைத்த இந்தியா என்பதே தவறு ....புள்ளி வைத்த இந்தி கூட்டணி என்பதே சரியானது.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    ஆக பிரதமர் கார்கே மம்தா லாலு சரத்பவார் பினராயி விஜயன் நிதிஷ்குமார் கமல்ஹாசன் முத்தரசன் திக்விஜய் சிங் கனிமொழி இவர்களில் யார் என சொல்லவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement