ADVERTISEMENT
புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ரமேஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். முதல்வர் ரங்கசாமி, பயணாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி பேசியதாவது;
பெண்களுக்கு நிறைய திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு நிதி உள்ளதா, எப்படி கொடுப்பார் என நினைக்கலாம். முதலில் 70 ஆயிரம் பேருக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
தற்போது ஒவ்வொரு தொகுதியாக விண்ணப்பம் பெற்று நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த பெண் குழந்தை பெயரில் ரூ 50 ஆயிரம் டெபாசிட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விபத்து காப்பீடு திட்டத்திற்கும் நிதி முழுதும் அரசு செலுத்தி விட்டது.
சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 300, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 150 காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யார் யார் காஸ் சிலிண்டர் வாங்குகிறார்கள் போன்ற விபரங்கள் சரியாக கிடைக்கவில்லை. சில வாரத்தில் விபரம் வந்து விடும். வந்ததும் காஸ் மானியம் உடனடியாக வழங்கப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!