ADVERTISEMENT
மேலுார், : மேலுார் புதுசுக்காம்பட்டி வினோபா காலனியில் கால்வாய் கட்டும் பணி முடியாத நிலையில், அதில் தண்ணீர் தேங்குவதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இக்காலனியில் 7 மாதங்களுக்கு முன் கழிவு, மழைநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கியது. இதுவரை பணி நிறைவு பெறவில்லை. அதனால் வீடுகளுக்குள் கழிவு, மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
சரவணன்: அதிகாரிகள் முறையான திட்டமிடல் இல்லாமல் வீடுகளுக்கு முன் 4 அடி உயரத்தில் கால்வாய் கட்டினர். வண்ணாம்பல கண்மாய்க்குள் நீரை சேமிப்பதாக கூறி கால்வாயை கட்டினர். ஆனால் பாதியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வீடுகளுக்குள் மழைநீர் நுழையவே யூனியன் அதிகாரிகள் புதிய கால்வாயை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இது அதிகாரிகளின் திட்டமிடலின்றி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் செயல், என்றார்.
யூனியன் அதிகாரிகள் கூறுகையில்,
ஒப்பந்ததாரர் சுரேஷ், பொறியாளர் கிருபாகரன் மூலம் உடனடியாக கால்வாய் பணியை முடிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!