Load Image
Advertisement

மோதலால் கனடாவுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படும்

 Conflict will result in revenue loss for Canada   மோதலால் கனடாவுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படும்
ADVERTISEMENT
திருப்பூர்:''இந்தியாவுடன் மோதல் போக்கு தொடர்ந்தால், கனடா அதிக வருவாய் இழப்பை சந்திக்கும்'' என, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பான 'பியோ' வின் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தியா - கனடா இடையே, வர்த்தகம், கல்வி சம்பந்தமான பரிவர்த்தனைகள் அதிகளவில் உள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், கல்வி நிமித்த மாக, கனடாவில் தங்கியுள்ளனர். இதனால், கனடா அதிகம் பயன்பெறுகிறது.

கனடாவுடன் கடந்த பல ஆண்டுகளாக, வர்த்தக உறவு வளர்ச்சி காணவில்லை; இருப்பினும், தொடர்பு முழுமையாக துண்டிக்கப்படவும் இல்லை.

ஆயத்த ஆடை உள்ளிட்ட ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, சராசரியாக 1,000 கோடி ரூபாய்க்கு நடக்கிறது. அதே அளவுக்கு இறக்குமதி வர்த்தக தொடர்பும் இருக்கிறது.

கனடாவுடன் மோதல் போக்கு தொடர்வதால், வர்த்தக ரீதியான பாதிப்பு அதிகம் இருக்காது; இந்தியாவுடனான கனடாவின், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக மதிப்பு, 32,800 கோடி ரூபாய் எனும் அளவுக்கு இருக்கிறது.

கனடாவின் வர்த்தக ரீதியான முதலீடுகள், இந்தியாவில் அதிகம் உள்ளன. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் மாணவர்கள் கனடா சென்று பயில்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மோதல் போக்கு தொடர்ந்தால், கனடாவுக்கு தான் அதிக வருவாய் இழப்பு ஏற்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (4)

  • BALOU - st-denis,பிரான்ஸ்

    பொருளாதார ரீதியாக கனடா விழ்ச்சி அடைந்த நாடு இன்னும் அதற்க்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் கன்னாடாவின் பப்பு

  • அப்புசாமி -

    பாரத்தை பகைச்சுக்கிட்டா அவிங்களுக்குதான் நஷ்டம். உலகத்தில் யாரு அப்பாச்சி, ரஃபேல், ஏவுகணை, துப்பாக்கின்னு ஆர்டர் குடுப்பாங்க?

  • 007 - TN,இந்தியா

    யாரு சார் நீங்க?பயங்கரமான கண்டுபிடிப்பு 🤭

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement