Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்:மெக்னீசியம் வரலாறு

அறிவியல் ஆயிரம்


மெக்னீசியம் வரலாறு

அறிவியல் தனிமங்களில் ஒன்று மெக்னீசியம். அறிவியல் குறியீடு எம்.ஜி. இதன் அணு எண் 12. அணு நிறை 24.31. உருகுநிலை 650 டிகிரி செல்சியஸ். கொதிநிலை 1091 டிகிரி செல்சியஸ். 1808ல் பிரிட்டனின் ஹம்ப்ரி டேவி இதை முதன்முதலில் பிரித்தெடுத்து கண்டுபிடித்தார். மெக்னீசியம்' பெயரையும் சூட்டினார். பூமியில் இரும்பு, ஆக்சிஜன், சிலிகான் ஆகியவற்றுக்கு அடுத்து அதிகளவில் கிடைக்கும் தனிமங்களில் 4வது இடத்தில் உள்ளது. இது அலுமினியத்தை விட குறைந்த அடர்த்தி கொண்டது. நமது உடல் செயல்பாடுகளில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.


தகவல் சுரங்கம்


உலக மகள்கள் தினம்

பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் கண்கள். பெண் குழந்தைகளை சுமையாக பார்க்காமல் வரமாக பார்க்க வேண்டும். ஆண் குழந்தையை போல பெண் குழந்தைகளையும் சமமாக கொண்டாட வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும்
செப்., நான்காவது ஞாயிறு (செப்.24) தேசிய மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது
பொதுவாக பெண் குழந்தை அப்பாக்களின் செல்லமாக இருப்பர். பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தவிர்ப்பது, அவர்களுக்குரிய உரிமை வழங்குவதற்கு இத்தினம் வலியுறுத்துகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement