Load Image
Advertisement

சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்

BJP leaders condemn Speaker Appavu speech  சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்
ADVERTISEMENT
சென்னை:சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: 'இந்தியாவில், 200 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் இருந்தன. அதில் படிக்க, 4 சதவீதம் பேருக்கு மட்டும் தான் அனுமதி; மீதமுள்ள, 96 சதவீத ஹிந்துக்களுக்கு, அருட்சகோதரர்கள், கிறிஸ்துவ மத போதகர்கள் கல்வி அறிவை கொடுத்தனர்' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கூறிய 4 சதவீத அருட்சகோதரர்கள், கிறிஸ்துவ மத போதகர்கள், கல்வி என்ற பெயரில், பாரத கலாசாரத்தை சிதைத்து, தங்களின் மதத்தை திணித்தனர். மத மாற்றத்திற்கு வழி வகுத்தனர். இதை சபாநாயகர் ஒப்புக் கொள்வாரா.தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட ஜாதியை துாற்றி, குறிப்பிட்ட மதத்தை போற்றும்சபாநாயகர் மதவாதியே.

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: சபாநாயகர் பொறுப்பில் இருந்து கொண்டு, தமிழக வரலாற்றை மாற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது. சனாதன தர்மம் உச்சத்தில் இருந்த, சேர, சோழ, பாண்டிய காலத்தில், ஆண், பெண் பேதமின்றி, குல வேறுபாடுகளின்றி, அனைவருக்கும் கல்வி கிடைத்ததை குறிக்கும் வகையில், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில், பரஞ்ஜோதியார் குறித்த வரிகள் இருப்பது, அப்பாவுக்கு எப்படி தெரியும்.

ஏற்கனவே கிறிஸ்துவர்களின் தயவால்தான், தி.மு.க., ஆட்சியில் உள்ளது எனக் கூறி, அருட்தந்தைகளை குளிர்வித்த சபாநாயகர், மீண்டும் அவர்களை குளிர்விக்க பேசிய பேச்சாகத்தான் இதை பார்க்க முடிகிறது. சபாநாயகரின் இம்மாதிரி பொய்யுரை தவிர்த்து, நற்பணி சிறக்க வாழ்த்துகள். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (54)

 • Venkatesan.v - Chennai,இந்தியா

  Adhu sari, who is this naravayan... how can you call him as a BJP leader???? Is he a MP/MLA, Ward member/ councilor Who is this man?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  என்ன செய்வது அவர்கள் நிலையய் பிச்சையய் கறாரகளுக்கும் கிழலெ போதைய கொண்டிருக்கிறது அவர்கள் எஜமானர்கள் தீ மு க்கா அவ்ர்கலிய்ய சார்ந்து அவர்களை குளிர் விக்க பேசி ஆக வேண்டிய கட்டாயத்தில் காங்கரஸ் தள்ள பட்டுள்ளது

 • vbs manian - hyderabad,இந்தியா

  பெரியார் பாதிரி யாரும் கல்வி கண்ணை திறக்க பெரிய முயற்சி செய்யவில்லை. மக்களின் விழிப்புணர்வு காலத்திற்கேற்ற பரிணாம வளர்ச்சியே நிறைய பேர் கல்வி கற்க தூண்டியது. அடிப்படை விழிப்புணர்ச்சி கற்கும் தாகம் இல்லாமல் கற்றல் வளராது. யாரும் யாருக்கும் எதையும் மறுக்க முடியாது.மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதை மைய புள்ளி ஆக கருதுகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கிறது.

 • KUMAR - NELLAI,இந்தியா

  சபாநாயகரா அல்லது சபை(கிறிஸ்தவ)நாயகரா என்று புரியவில்லை.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  மேடை, மைக் கிடைத்தால் கண்டபடி வாயை விடுவதுதான். திராவிட மாடலின். தனிப்பெரும் தகுதி என்பதற்கு இன்னொரு சான்று

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்