Load Image
Advertisement

ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு.. ஏன் விவாதிக்கவில்லை?": ஸ்டாலின் கேள்வி

 Rs 7.5 lakh crore embezzlement; Why not discuss it?”: Stalins question   ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு.. ஏன் விவாதிக்கவில்லை?": ஸ்டாலின் கேள்வி
ADVERTISEMENT

சென்னை: ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை? எனவும், சிஏஜி அறிக்கை குறித்து பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை? எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமீபத்தில் இந்தியாவின் குரல் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, அதில் பாஜ., அரசு குறித்து, குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதன்படி, 2வது வீடியோவை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப்.,23) வெளியிட்டுள்ளார்.

வீடியோவில் ஸ்டாலின் பேசியதாவது: ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு குறித்து ஏன் விவாதிக்கவில்லை?. சிஏஜி அறிக்கை குறித்து பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில் ஏன் விவாதிக்கவில்லை?. 2014, 2019 போல் 2024 தேர்தலிலும் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜ., ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்.


பதிலளிக்க வேண்டும்




60 மாதங்கள் கொடுங்கள், இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றுவேன் என, மோடி கூறினார். இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றிவிட்டாரா என்ற கேள்விக்கு, பிரதமர் பதிலளிக்க வேண்டும். வகுப்புவாதம் ஊழல் மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்டதாக பாஜ., அரசு உள்ளது.


ஊழல்




ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் கூட ஊழல் செய்த கட்சி தான் பாஜ., என்று சிஏஜி அறிக்கை சொல்லி உள்ளது. பாஜ., வின் வகுப்புவாத கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ., வீழ்த்தப்பட்டிருக்கிறது.

ஏழை பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு விரோதமாக பிரதமர் செயல்படுகிறார். இண்டியா கூட்டணியின் பரப்புரை பாஜ., கட்சி பிரதமர் மோடியின் பிம்பத்தை கிழித்துவிட்டது. 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்யும் வாய்ப்பை பா.ஜ.,வுக்கு மக்கள் வழங்கி உள்ளனர். வாய்க்குள் நுழையாத பெயர்களை திட்டங்களாக வைக்கிறது பாஜ., அரசு.


முறைகேடு




சிஏஜி அறிக்கை மத்திய அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி உள்ளது.10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பாஜ., நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவில்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.



வாசகர் கருத்து (76)

  • gvr -

    Lying is Dravidian model. Stalin should talk about corruption cases against sitting ministers many of whom may soon be put behind bars by ED.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    ஸ்டாலின் என்ற பெயரே தமிழ்நாட்டில் சிலருக்கு வாயில் நுழைய மாட்டேங்குது. உதயநிதி பிள்ளைகளுக்கும் செந்தாமரை பிள்ளைகளுக்கு தாத்தா வாயில் நுழைகிற பெயரா வைத்திருக்கிறீர்.

  • vbs manian - hyderabad,இந்தியா

    கார்பொரேட் கம்பெனிகள் இல்லாமல் இந்தியாவை நினைத்து பார்க்க முடியுமா. டாடா பிர்லா அதானி அம்பானி கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். ஊசி முதல் ராக்கெட் வரை தயாரிக்கிறார்கள். தோலை தொடர்பு கட்டுமான வளர்ச்சி என்று ஜொலிக்கின்றனர். பல வெளி நாடுகளில் இந்தியா கம்பெனிகள் சாதிக்கின்றன. பரந்தூர் விமான நிலையம் கேரளாவில் துறைமுகம் மற்றும் பல காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் திட்டங்கள் செயல் படுத்துகிறார்கள்.ஏன் தி மு க வே கார்பொரேட் என்று பலர் சொல்கிறார்கள். கார்பொரேட் இல்லையென்றால் இந்தியா வெறும் எலும்பு கூடாய் காட்சியளிக்கும்.

  • krishna -

    VAAYAI THIRANDHAALE POI MATTUME VARUM.7.5 LATCHAM CENTRAL HEALTH SCHEMIL ORE MOBILE NO KODUTHU CLAIM PRIVATE HOSPITALS SEIDHADHAI KANDU PIDITHU CAG MURAIKEDU ILLAMAL THAVIRTHU VITTADHU.IDHA D4AVIDA MODEL KUMBAL ONNUM PURIYAAMA 7.5 LATCHAM KODI OOZHAL ENA ULARUVADHU SAABA KEDU.OOPIS KUMBALUKKU MOOLAI ENBADHE KIDAYAADHU.

  • sankar - Nellai,இந்தியா

    சிஏஜி - என்பதன் விரிவாக்கம் தெரியுமா - முதலில் டாஸ்மாக் விரிவாக்கம் தெரியுமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்