Load Image
Advertisement

சீமான் மனைவிக்கு பொதுச்செயலர் பதவி?

Naan Thamilar Katchi General Secretary post for Seemans wife Kayalvizhi ?   சீமான் மனைவிக்கு பொதுச்செயலர் பதவி?
ADVERTISEMENT
நாம் தமிழர் கட்சியில், காலியாக உள்ள பொதுச் செயலர் பதவியை, தன் மனைவி கயல்விழிக்கு தர, சீமான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுச்செயலர் தடா சந்திரசேகர், பொருளாளர் ராவணன் என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த பட்டியலில் உள்ளது. பொதுச்செயலராக இருந்த தடா சந்திரசேகர், ஒரு மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். அவர் வகித்த பதவி, தற்போது காலியாக உள்ளது. அப்பதவிக்கு தன் மனைவி கயல்விழியை கொண்டு வர, சீமான் மட்டுமின்றி, கயல்விழியும் விரும்புகிறார்.

தன் மீது விஜயலட்சுமி அளித்த புகாரை அடுத்து, நடிகர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று விளக்கம் அளித்தார். அப்போது, தன் சார்பில் காவல் துறையினரிடம் சில கருத்துக்களை எடுத்து வைத்துப் பேச, கயல்விழியை காவல் நிலையம் அழைத்துச் சென்றார். பின், காவல் நிலைய வாசலில் வைத்து பேட்டியளித்தார். அப்போது, தன்னுடைய மனைவி கயல்விழியையும் கூடவே வைத்துக் கொண்டார் சீமான். பெரும்பாலும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சி எதிலும் சீமான், மனைவி கயல்விழியுடன் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

விஜயலட்சுமி விவகாரத்தை அடுத்து, கயல்விழியை காவல் நிலையம் அழைத்து வந்ததன் வாயிலாக, அவருக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதை சீமான் வெளியே காட்டியுள்ளார். இதையடுத்தே, சீமான் திட்டமிட்டே கயல்விழியை அரசியலுக்குள் நுழைப்பதை புரிந்து கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (22)

  • Raa - Chennai,இந்தியா

    அப்ப விஜயலக்ஷ்மிக்கு என்ற பெயர் வைத்திருபவருக்கு பொருளாளர் பதிவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்

  • nizamudin - trichy,இந்தியா

    ஆரம்பமா வாரிசு அரசியல் ?

  • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

    இனி வாரிசு அரசியல் பத்தி பேசினா என்ன பண்ண வேண்டும்...

  • jayvee - chennai,இந்தியா

    ஜெயலலிதா கைதானபோது OPS CM ஆகலையா .. அது மாதிரி இது ஒரு ஒத்திகை

  • kulandai kannan -

    இப்போதான் உண்மையான தமிழக அரசியல்வாதியாகிறார் டம்ளர் சாமான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்