Load Image
Advertisement

பயிர் கணக்கெடுப்பு செய்யவில்லை என விவசாயி புகார்: அலுவலர்களை கூண்டோடு மாற்றுமாறு ஆவேசம்

Farmer complains of not doing crop survey: Urge to replace officers with cages   பயிர் கணக்கெடுப்பு செய்யவில்லை என விவசாயி  புகார்: அலுவலர்களை கூண்டோடு மாற்றுமாறு ஆவேசம்
ADVERTISEMENT
கடலுார்- கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பயிர் சாகுபடி குறித்த கணக்கெடுப்பு செய்யவில்லை எனவும், அலுவலர்களை கூண்டோடு மாற்றுங்கள் என விவசாயி ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மற்றும்விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர்அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். விவசாயிகளிடம் குறைகளைகேட்டறிந்து மனுக்களை பெற்ற கலெக்டர், நடவடிக்கை எடுக்குமாறுஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது;

மாதவன்: சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.தேவையான விதை, உரம், யூரியா தட்டுபாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ஆருவாமூக்கு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சிப்காட் கழிவுகள் உப்பனாற்றில் கலப்பதால் காற்று மாசுபாடுகின்றது. சிப்காட்ஆலைகளால் கடலுார் பகுதியில் புற்றுநோய் அதிகரித்துள்ளது.

பெரிய நெசனுார், அடரி, மங்களூர், சிறுபாக்கம் கிராமங்களில் விவசாய பயிர்களைகாட்டுப்பன்றி, குரங்கு. மயில் சேதப்படுத்துகின்றது.

வேல்முருகன்: புவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கில் விரைவில்தடுப்பணை கட்ட வேண்டும். சேத்தியாத்தோப்பு-கம்மாபுரம் சாலைஆக்கிரமிப்புக் களை அகற்றி சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

பயிர்காப்பீடு திட்டத்தில் ஏக்கருக்கு எவ்வளவு காப்பீடு செலுத்த வேண்டும் எனவிவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முருகானந்தம்: ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் விளை நிலங்களில் மின்மோட்டார்களின் ஒயர்களை மர்மநபர்கள் திருடிசெல்கின்றனர். இதை தடுக்க காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரங்கநாயகி: அனைத்து விவசாயிகளுக்கும் உழவு மானியம் வழங்க வேண்டும்.தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயிர் தோப்புகுளத்தை துார்வார வேண்டும்.

குஞ்சிதபாதம்: நோயால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிருக்கு நிவாரணம் வழங்கவேண்டும். வங்கியாளர்கள் கூட்டம் கூட்டி விவசாயிகளுக்கு கடன் வழங்கவேண்டும்.

வண்ணான்குடிகாடு வாய்க்காலை துார்வாரி பராமரிக்க வேண்டும்.ஸ்ரீ முஷ்ணத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி திறக்க வேண்டும்.

கலியபெருமாள்: விஜய மாநகரத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதமடைந் துள்ளதை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எல்.சி.,யால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தோட்டக்கலை துறை மூலம் ஆடி பட்டத்திற்கான மிளகாய், கத்திரி உள்ளிட்ட விதைகள்வழங்கவில்லை.

பாலமுருகன்: பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால்கோவையில் உள்ளது போன்று, நன்மை செய்யும் பூச்சியை கடலுார் மாவட்டவிவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

மணிகண்டன்: மங்களூர் ஒன்றியத்தில் மக்கா சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது.

இந்த பயிர்களுக்கு மருந்து அடிக்க, கூட்டு றவு சொசைட்டி மூலம் ட்ரோன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நல்லுார், மங்களூர் பகுதிகளில் வி.ஏ.ஓ.,க்கள், உதவி வேளாண் அலுவலர்கள் சரியாக பயிர் கணக்கெடுப்பு செய்வதில்லை. இதனால், பயிர் காப்பீடு செய்தும், அரசு கணக்கில் நாங்கள்சாகுபடி செய்த பயிர் இல்லாததால், நிவாரணம் பெற முடியவில்லை.

இந்தஅலுவலர்கள் உள்ளூர்களிலேயே இருப்பதால், கடைகள் வைத்துகொண்டு,தங்கள் வேலையை பார்க்கின்றனர். இதனால், நல்லுார், மங்களூர் பகுதியில்உள்ள அலுவலர்களை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்.

செஸ் வரிசெலுத்தாமல், விவசாயிகளிடம் நேரடியாக மக்கா சோளத்தை வியாபாரிகள்கொள்முதல் செய்வதால், அரசிற்கு கோடி கணக்கில் வருவாய் இழப்புஏற்படுகின்றது.

அதற்கு பதிலளித்த கலெக்டர் அருண் தம்பு ராஜ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளை யும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் சரிவர பணிபுரிய வில்லை என்பது கண்ட றியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    கடமையை செய்யாதவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement