நேற்று நடந்த அந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வரும்போது, வரவேற்பு அளித்த பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பிரதமர் காலைத் தொட்டு வணங்கினார். இதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்த பிரதமர், வானதியை கடிந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடந்தது என்ன என்பது குறித்து, வானதி அளித்த பேட்டி:
மகளிருக்கு இடஒதுக்கீடு அழிக்கும் மசோதாவை நிறைவேற்றி, யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியம் செய்த பிரதமருக்கு நன்றி சொல்வதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பின், 'பெண்களுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடே கொண்டு வரப்பட்டுள்ளது.
'இத்தனை பெரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வணங்குவது இடஒதுக்கீடு கொண்டு வந்த நோக்கத்துக்கு எதிராக இருக்காதா?' என கேட்டு அறிவுரைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (29)
Drama staged
காலைத் தொட்டு வணங்கினால் பதவி கிட்டும் என்பது திராவிடக் கலாசாரம். மோதி அவர்களைப் பொறுத்தவரை கூழைக்கும்பிடு, காலைத்தொட்டு வணங்குவது, வாரிசு அரசியல் இவையெல்லாம் பிடிக்காது.
நீங்கள் ஒழிந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்
மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது இப்போது தானே ? இதை ஏன் பொய் என்று கூற வேண்டும் ? எவ்வளவு தடவை மக்களவையில் தாக்கல் செய்தாலும் நிறைவேற்றாமல் இருந்தால் அதில் பெருமை இன்ன இருக்கிறது ? தேர்வு எழுதியதை மட்டும் வைத்து ( தேறாவிட்டால் ) வைத்து எங்கேனும் சான்றிதழ் கிடைக்குமா ?
Vanathi thana vizhundhangala illa Vizha sonnangala, idhu BJP style. Rombha nadippu nalladhalla, sirippu varudhu