Load Image
Advertisement

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு துவங்கியது

 Nellai - Chennai Vande Bharat: Fast luxury train to southern districts from tomorrow    சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு துவங்கியது
ADVERTISEMENT
மதுரை : சென்னை-- நெல்லை செல்லும் 'வந்தே பாரத்' துரித ரயிலில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று( செப்.,23) துவங்கியது.

நாடு முழுவதும் ஒன்பது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிகாட்சி வாயிலாக நாளை துவக்கி வைக்கிறார். இதில் தெற்கு ரயில்வே பிரிவில் நெல்லை - சென்னை உள்பட மூன்று வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.

நேற்று காலை நெல்லை - சென்னை வரை சோதனை ஒட்டம் நடந்தது. தொடர்ந்து நாளை தொடக்க விழாவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

துவக்கம்



இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. இதற்கான கட்டணம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. டிக்கெட்கள் வேகமாக முன்பதிவாகி வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிக்கெட் கட்டணம்



அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1,610 ஆகவும், முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.3,005 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tamil News
Tamil News
நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக ரூ.1,665 ஆகவும், முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக ரூ,3,055 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இருக்கைகள்:



எட்டு ஏசி வசதி பெட்டிகள் கொண்ட ரயிலில் எக்ஸ்கியூட்டிவ் பெட்டி ஒன்று, 7 சேர் கார் இருக்கைகள் கொண்ட பெட்டிகள் இடம் பெற்றுள்ளன. சேர் கார் பெட்டி ஒவ்வொன்றிலும் 78 இருக்கைகள், எக்ஸ்கியூட்டிவ் பெட்டியில் 52 என, மொத்தம் 535 இருக்கைகள் உள்ளன. பெட்டிகளில் சி.சி.டி.வி.க்கள், 2 எல்.இ.டி. டிவிக்கள், முதலுதவி பாக்ஸ், அனைத்து சீட்டிலும் அலைபேசி சார்ஜர் வசதிகள் உள்ளன.

அவசர வழி,தொடர்பு வசதி:



ரயில் ஓட்டுநர், பாதுகாப்பு (கார்டு) அதிகாரியை அவசரத்திற்கு தொடர்பு கொள்ள டிஜிட்டல் மைக் வசதி, தீயணைப்பான்கள், ஆபத்தான நேரத்தில் கண்ணாடியை உடைத்து வெளியேறுவதற்கான சாதனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. நவீன கழிப்பறை, பயணிகள் புகைப் பிடித்தால் உடனே எச்சரிக்கும் கருவி, கையால் தொட்டால் மின் விளக்கு எரிதல், திறக்கும் டிஜிட்டல் கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு சீட்டிலும் முன் பகுதியில் சாப்பிடுவதற்கென டேபிள் போன்ற வசதி இருக்கிறது. லேப்டாப் வைத்து பணி செய்யலாம். எல்லா பெட்டிகளுக்கும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூலம் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.எக்ஸ்கியூட்டிவ் பெட்டியில் 2 இருக்கை கொண்ட சீட்டுகளை 180 டிகிரியில் சுழற்றிக் கொள்ளலாம். இதன்முலம் வெளிப்புற காட்சிகளை காணலாம்.

ரயிலின் வெளிபுறத்திலும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. வளைவான பகுதியில் செல்லும்போது, வெளிபுறத்தை கார்டு கவனிக்க முடியும். இது தவிர முன், பின் இன்ஜின் பகுதிகளில் கேமராக்கள் இடம் பெறுகின்றன. இதன் மூலம் தண்டவாள பகுதியை கார்டு கண்காணிக்கலாம். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.



வாசகர் கருத்து (11)

  • Mohammad rafi - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    கன்னியாகுமாரி மக்களை காரி துப்ப வேண்டும் .... ஒரு கையாலாகாத காங்கிரஸிக்கு வோட்டு போட்டு , ஷோரூம் மட்டும் ஓபன் பண்ணிக்கிட்டு இருக்காங்க , வளர்ச்சி இல்லை ..... நான் பிஜேபி கரண் இல்லை ..... சிந்திக்கவும் .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Many of the Super Fast trains are not Stopping at Srirangam which is a holy Place and Tourist Spot .The Commuters have to return back to Srirangam either by catching Auto,Bus or any Cab which raises the Transport cost and Expenditure of the Common man,Lot of time is also getting wasted hence People have to come back wards.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    தாம்பரத்தில் நிற்கும் ரயில் வணிக நகரமான கோவில் ஏன் நிற்க தயங்குகிறது

  • duruvasar - indraprastham,இந்தியா

    கல்லெறி கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • veeramani - karaikudi,இந்தியா

    வந்தே பரத் ரயில்..தென் மாவட்ட மக்களுக்கு மைய்ய அரசின் மிகப்பெரிய பரிசு. நெல்லை.. அம்பலவாணர்- காந்திமதி இவர்களுக்கு பின்னர் வந்தே பரத் மக்களிடம் பெருமையாக பேசப்பட போகிறது. நாகர்கோயில் சிட்டிசன் கருத்து. நெல்லையில் இருந்து நாகர்கோயில் பேருந்தில் ஒரு மணி நேர பிரயாணம். கூவவேண்டாம். நாகர்கோயில் சென்னை ரயில் போக்குவரத்து. தற்சமயம் கன்னியாகுமரி எஸ்பிரெஸ் , அனந்தபுரி , நாகர்கோயில் ஸ்பெஷல் , மற்றும் திருச்சிக்கு அனைத்து வகை ரயிகளும் உள்ளன. இதேபோல எங்களது ராம்நாத், செட்டிநாடு பகுதிக்கு எத்துணை ரயில்கள் உள்ளன ..வெறுமனே இரண்டு..ராமேஸ்வரம் எஸ்பிரெஸ் , செத்தே எஸ்பிரெஸ். இரண்டிலும் சுமார் அறுபது சதவீதம் வாடா நட்டு சுற்றுலாப்பயணியார். எங்களது கோரிக்கை. அடுத்த வந்தே பரத்.. ராமேஸ்வரம் சென்னை ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement