ADVERTISEMENT
ரகசிய துாது சென்ற, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரால், டில்லி அரசியல் வட்டாரங்கள் நேற்று பரபரப்பாக இருந்தன.
வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று, பல்வேறு இடங்களில் இருந்து கொச்சியில் கூடினர். அ.தி.மு.க.,- -பா.ஜ., கூட்டணி பற்றி அமித்ஷாவிடம் இறுதி பேச்சு நடத்த, அங்கிருந்து ரகசியமாக டில்லிக்கு சென்றனர்.
அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் திரண்ட அவர்களிடம், 'நான் கனடா விஷயத்தில் பிஸியாக இருக்கிறேன். கூட்டணி பற்றி பழனிசாமியுடன் பேசிக் கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதாவது பேச வேண்டுமானால், நீங்கள் அமைச்சர் பியுஷ் கோயலிடம் பேசிக் கொள்ளுங்கள்' என, தகவல் மட்டும் அனுப்பி, அவர்களை பார்க்காமலேயே அனுப்பி விட்டார்.
பியுஷ் கோயல், பிரதமருடன் இருந்ததால், அவரை சந்திக்க நெடுநேரம் காத்திருந்து அண்ணாமலை பற்றி புகார் தெரிவித்ததோடு, அண்ணாமலை இருந்தால் கூட்டணி இல்லை என்று, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். அதுபற்றி அமித்ஷாவுடன் ஆலோசித்து விட்டு தகவல் தெரிவிக்கிறேன் என்று மட்டும், பியுஷ் கோயல் சொல்லி அனுப்பியதால், அ.தி.மு.க.,வினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
தேர்தல் வரை கூட்டணி பற்றி முடிவு செய்ய காத்திருக்கலாம் என்று அறிவித்து விட்டு, இப்போது, அ.தி.மு.க., ஏன் பரபரப்பாக செயல்படுகிறது என்று விசாரித்த போது, காங்கிரசுடன் கூட்டணி பேச்சு முடியும் தருவாயில் இருப்பதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில், காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் திருமாவளவன் பேசி வருகிறார். காங்கிரஸ், 20 தொகுதிகள் கேட்டுள்ளது. அதற்கு, அ.தி.மு.க.,வும் சம்மதம் தெரிவித்து விட்டது. காங்கிரசில் அனேக மூத்த தலைவர்கள் சம்மதித்து விட்டனர். ராகுல் மட்டுமே, இன்னும் தி.மு.க.,வுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என, விடாப்பிடியாக இருக்கிறார். அதனால், பேச்சு சற்று தொங்கலில் இருக்கிறது.
இந்த நேரத்தில், பா.ஜ., நிலையை தெரிந்து கொள்ளத்தான் முன்னாள் அமைச்சர்கள் டில்லி வந்திருக்கின்றனர். இங்கு அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பும், பதிலும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்நிலையில், அ.தி.மு.க., இன்னும் இரண்டு நாட்களில் செயற்குழுவை கூட்டி பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
*
-நமது நிருபர்-
வாசகர் கருத்து (13)
பன்னீர்செல்வம் இருந்தவரை இருகட்சிக்கும் அனுசரித்து செயல்பட்டார். ஆனால் அவரை ஆளுமையற்றவர், வீரமற்றவர், கோழை , துரோகி, என்று வசைபாடி வெளியே அனுப்பிவிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களிடம் தன்னுடைய ஆளுமையை எடப்பாடியாரால் முழுவதுமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கட்சியின் ஒற்றைத்தலைவர் , புரட்சி தமிழர் என்று பட்டம் வாங்கிவிட்டார். ஈகோ என்ற இரெண்டெழுத்து தான் இதெற்கெல்லாம் காரணம் என்பதை காலம் அனைவருக்கும் உணர்த்தும்.
திராவிட காட்சிகள் வேரோடு அழியும் காலம் நெருங்குகிறது.
சந்தோசம்தான் ஊழலுக்கும் திருட்டு திராவிடத்துக்கு எதிரான போர் நடக்க உதவியாக இருக்கும்.
சட்டுபுட்டுடன்னு முடிவு எடுங்கப்பா . பேச்சுவார்த்தை நடத்துவதாக வேறு குயிலார் சொல்லிவிட்டு பறந்துபோய் விட்டார்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அதிமுக பாஜக கூட்டணி வராததே மேல். பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், இவை போதும். 40 இல்லைன்னாலும் 20வது தேறும்.