Load Image
Advertisement

டவுட் தனபாலு

 Dout Dhanapalu    டவுட் தனபாலு
ADVERTISEMENT
மா.கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி: பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை விரைவில் அமல்படுத்த வேண்டும். இதற்காக, ஏற்கனவே 27 ஆண்டுகள் வீணாகி விட்டன. இனியும் தாமதம் வேண்டாம்.

டவுட் தனபாலு: இந்த 27 ஆண்டுகள்ல, மத்தியில நீங்க அங்கம் வகித்த ஆட்சியும், நீங்க ஆதரவு தெரிவித்த கட்சியின் ஆட்சிகளும் நடந்துள்ளன... அப்ப எல்லாம், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நீங்க என்ன முயற்சிகள் எடுத்தீங்க என்ற, 'டவுட்'டுக்கு விடை தர முடியுமா?



பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்:
மோசடி நிதி நிறுவனங்களான ஆருத்ரா, ஐ.எப்.எஸ்., மற்றும் ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர்கள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர். இவர்கள், தமிழகத்தில் மோசடி செய்த தொகையில், 500 கோடி ரூபாய்க்கு மேல் துபாயில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த தொகையை முடக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முதலீடுகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

டவுட் தனபாலு: இந்த நிறுவனங்கள், 25,000 கோடி ரூபாய்க்கு மேல மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்குது... அதுல, 500 கோடியை மட்டும் துபாயில முதலீடு பண்ணியிருந்தால், மீத பணம் எல்லாம், எங்க, யாரிடம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற, 'டவுட்'டுக்கு விடை தேட போலீசார் முயற்சிப்பாங்களா?



தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். காவிரி விவகாரத்தில் இனி பேச்சு என்பதே கிடையாது. பல ஆண்டுகள் பேசிப் பேசி பார்த்து பயன் இல்லாத காரணத்தால் தான், நடுவர் மன்றம் சென்றோம். எனவே, இனி எதுவாக இருந்தாலும், உச்ச நீதிமன்றம் தான்.

டவுட் தனபாலு: அதுவும் சரி தான்... கர்நாடகாவிடம் பேசிப் பேசி, நம் தொண்டை தண்ணீர் வற்றியது தான் மிச்சம்... காவிரி தண்ணீர் கிடைச்சபாடில்லை... காவிரி விவகாரத்தில், நம் பக்கம் நியாயம் இருப்பதால், உச்ச நீதிமன்றம் ஒன்றே நமக்கான ஒரே தீர்வு என்பதில், 'டவுட்'டே இல்லை!




வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    25000 கோடிக்கி மேல் மோசடி..அதுல, 500 கோடியை மட்டும் துபாயில முதலீடு, மீத பணம் எல்லாம், எங்கே..? பழனிவேல் ராஜன் பெயர் எங்கே ரொம்ப நாளா காணோம். அவருக்கு தெரிந்திருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement