Load Image
Advertisement

அரசு பள்ளி வளாகத்தில் மின்விபத்து அபாயம்

 Risk of electrocution in government school premises    அரசு பள்ளி வளாகத்தில்  மின்விபத்து அபாயம்
ADVERTISEMENT
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம்கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதே வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளியும் அமைந்துள்ளது.

ஒருங்கிணைந்த இந்த வளாகத்தின் வடக்குப் பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டி, மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி, பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள மரக்கிளைகளில் உரசுகின்றன. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.

மரக்கிளைகளை அகற்றுவது தற்காலிகமான தீர்வாக அமையும் என்பதால், மின்மாற்றியை பாதுகாப்பான தொலைவில் மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளியை ஒட்டிச் செல்லும் சமத்துவபுரம் சாலையில், மின்மாற்றியை நிறுவுவது பாதுகாப்பாக இருக்கும் எனவும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement