Load Image
Advertisement

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆய்வு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

 Supreme Court Rejects Scrutiny on Voting Machines    ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆய்வு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
ADVERTISEMENT
புதுடில்லி :தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள மென்பொருளை தணிக்கை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது.


உச்ச நீதிமன்றத்தில், சுனில் ஆஹ்யா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள், ஜனநாயகத்தைப் பற்றியது.


'எனவே, அதை, தனி அதிகாரம் படைத்த ஒரு அமைப்பின் தணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதில் அந்த அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட்டதாக தெரியவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து (13)

  • Siva - Aruvankadu,இந்தியா

    இந்த மிஷின் உருவாக்கம்.. இதில் முக்கிய பங்கு வகித்தது சுஜாதா என்ற ரங்கராஜன் ஐயர். இவர் பற்றி எல்லாம் நாடு முழுவதும் பள்ளியில் பாடம் வைத்து இருக்க வேண்டும். ஆனால் திராவிடன் புத்திசாலிகளை மதித்து நடக்க தெரியாத ஜந்து. கமல் ஹாசன் அவரை பயன் படுத்தினார். ரஜினி க்கும் நண்பர்தான். ஆனால் பணத்திற்கு முன் அவரை மறந்து மறைத்து விட்டனர்.

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அமைப்பு. அதனால் இன்னொரு அமைப்பு ஏற்படுத்தி பணத்தை விரயம் செய்யத்தேவை இல்லை.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    It is unfair.....

  • Godyes - Chennai,இந்தியா

    மெஷின்ல குறையிருந்தால் கள்ள ஓ ட்டு போடுவதை தடுக்கும்.அயோக்யர்கள் தேர்தலில் நிற்க அனுமதித்தால் அதை யார் தடுப்பது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எத்தனை தடவை மூக்கறு பட்டாலும் இந்த காங்கரஸ் காரனுக்கு புத்தி மட்டு தான் மூக்கறுபட்டு பாவத்தால் சந்தேங்கத்தின் பெயரில் யார் பேயரிலாவது மனு கொடுப்பது எவனையாவது ஏவி கோர்டின் நெர்த்தாய்ய்ய வீணாக்குவது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement