அறிவியல் ஆயிரம்:தனிமங்களின் சிறப்பு
அறிவியல் ஆயிரம்
தனிமங்களின் சிறப்பு
அறிவியலில் தனிமம் என்பது தனி இயல்புடைய ஒரு பொருளைக் குறிக்கும். இரும்புடன் தங்கத்தை ஒப்பிட்டால் இரும்பு எளிதில் துருப்பிடிக்கும். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தங்கத்தின் நிறம், குணம் மாறுவதில்லை. அதே வேளை இரும்பின் வலிமை தங்கத்தின் வலிமையை விட அதிகம். இவ்வாறு ஒவ்வொரு பொருளும், அவற்றின் அடிப்படை இயற்பியல், வேதியியல் பண்பு அடிப்படையில் வெவ்வேறு தனிமங்களாகின்றன. இவை இரும்பு போன்ற திடப்பொருளாகவோ, பாதரசம் போன்ற நீர்மமாகவோ, ஆக்சிஜன் போன்ற வாயுவாகவோ இருக்கும்.
தகவல் சுரங்கம்
சைகை மொழி தினம்
உலகில் 7 கோடி பேர் காது கேளாதவர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களிடம் 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. 1951 செப். 23ல் உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே சர்வதேச சைகை மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சைகை மொழி என்பது தெரியப்படுத்தும் தகவலை சைகை மூலம் மற்றவருக்கு காட்சிபடுத்துவது ஆகும். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!