Load Image
Advertisement

பாலக்காட்டில் சர்வதேச பிராமணர்கள் மாநாடு; செப்.,24 வரை நடக்கிறது

International Brahmin Conference at Palakkad; It will be 3 days from today   பாலக்காட்டில் சர்வதேச பிராமணர்கள் மாநாடு; செப்.,24 வரை நடக்கிறது
ADVERTISEMENT
பாலக்காடு : பாலக்காட்டில் சர்வதேச பிராமணர்கள் மாநாடு நேற்று 22ம் தேதி துவங்கியது. செப்.24ம் தேதி வரை நடக்கிறது.

பிராமண சங்கம் பாலக்காட்டில் 22,23,24 ஆகிய தேதிகளில் தனது உலகளாவிய மாநாட்டை நடத்துகிறது. கேரளா பிராமண சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கும், சமூகத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான புதிய எல்லைகளைத் திறப்பதற்கும் இந்த சந்திப்பு சிறந்த தளத்தை வழங்குகிறது.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


பாலக்காடு கிளப் 6 கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் இந்த மாநாடில் வைதிக கலாச்சாரம், கல்வி, மேலாண்மை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில்முனைவு குறித்த சிறப்பு வர்த்தக கண்காட்சியும் இடம் பெறுகிறது.

3வது நாள்( செப்.,23) நிகழ்ச்சியை காண கிளிக் செய்யுங்கள்



https://www.youtube.com/watch?v=VmRR04--Bu4



வாசகர் கருத்து (34)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    திராவிட அரசியல் தொழில் நடத்த பிராமணர்களை மட்டம் தட்டும் போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாடு தவிர பிறமாநிலங்களில் பிரமணர்களுக்கு மதிப்புண்டு. ஜாதி பேதமில்லை. கேராளாவில் இந்த பிராமண மாநாட்டை இன்னும் விளம்பரப்படுத்தி பெரிதாக நடத்தியிருக்கலாம். தமிழ்நாட்டில் அதுபோல் நடத்த விடுவார்களா..??

  • Murthy - Bangalore,இந்தியா

    இதிலென்ன பெருமை?

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    குவாட்டரும் பிரியாணியும் இல்லை எனவே இ.ண்டியா கூட்டணி குண்டார்கள் மிஸ்சிங்

  • Muga Kannadi - chennai,இந்தியா

    மகரிஷி விஷமித்திரரை ப்ராஹ்மணர்கள் பின் பற்ற வேண்டும்... இன்றைய தேவை...

  • Venkataraman - New Delhi,இந்தியா

    வாழ்த்துக்கள். பிராமண சங்கத்தின் சேவைகள் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள். பாலக்காடு பிராமணர்கள் சிறந்த சங்கீத வித்வான்கள், பக்திமான்கள்,. சேஷன், பாலகிருஷ்ணன், உன்னி கிருஷ்ணன், பரமேஸ்வரன், நாராயணன் போன்ற பெயர்கள் மிகவும் புகழ்பெற்றவை. கல்பாத்தி இப்போதும் பிராமண சாப்பாட்டுக்கு விசேஷமான ஊர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement