ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக அளிக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
இந்தியாவில் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அனைத்து அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிகள் பைனலில் மோதும்.

இந்த உலக கோப்பைக்கான பரிசுத் தொகையினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது.
பைனலில் தோற்று 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16.5 கோடியும், அரையிறுதிகளில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.6.63 கோடியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.
நமது நாட்டில் கிரிக்கெட் 'கிறுக்குகள்' இருக்கும்வரையில், ரூ.33 கோடி பரிசு என்ன, அதற்கு மேலும் பரிசுத்தொகை அறிவிப்பார்கள்.