Load Image
Advertisement

முதல் ஒரு நாள் போட்டி: ஆஸி., 276 ரன்கள் குவிப்பு

India v Australia First ODI: Australia score 276 runs   முதல் ஒரு நாள் போட்டி: ஆஸி., 276 ரன்கள் குவிப்பு
ADVERTISEMENT
மொகாலி: மொகாலியில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 50 ஓவரில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று மொகாலியில் (பஞ்சாப்) நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்தார். ஜோஸ் இங்லிஸ் 45, ஸ்டீவன் ஸ்மித் 41, லபுஸ்சங்கே 39 , கேமரூன் கிரீன் 31, மார்கஸ் ஸ்டாயின்ஸ் 29 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் மிச்சல் மார்ஷ் 4, மாத்யூ ஷார்ட் 2, அபோட் 2 , ஆடம் ஜம்பா 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் முகமது ஷமி அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement