ADVERTISEMENT
பெங்களூரு: காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் 'பந்த்' அறிவித்துள்ளனர். இதற்கு அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், 'விவசாயிகளுக்காக கர்நாடக அரசு போராடி வருகிறது. எனவே 'பந்த்' அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், 'காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நதி நீர் ஒழுங்குகாற்று கமிட்டி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது' என நேற்று (செப்.,21) உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நாளை மாநிலம் தழுவிய 'பந்த்' நடத்த சில கர்நாடக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது: தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய பங்கு குறித்த உத்தரவுக்கு நாம் கட்டுப்பட வேண்டும். இந்த 'பந்துக்கு' யாரும் அழைப்பு விடுக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.
இந்த 'பந்த்' விவகாரங்களில் நீதிமன்றம் மிகவும் கண்டிப்பானது. நாளை ஏதாவது நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, உடனடியாக 'பந்தை' வாபஸ் பெற வேண்டுகோள் விடுக்கிறேன். கர்நாடக விவசாயிகளுக்காக போராட அந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
பிள்ளையை கிள்ளி விட்டுதொட்டிலை ஆட்டும் அபாரஅரசியல். தமிழ் நாட்டிலும் இருக்கே விடியல் நடு. ஜாமத்தை தந்துகொண்டு
தமிழக முதல்வர் இதுபோன்று தமிழக விவசாயிகளுக்காக ஒரு ஆத்மார்த்தமான அறிக்கை விடுவாரா? விடுவார். எப்படி என்றால், யாராவது எழுதிக்கொடுத்தால், அதை சரியாக படிக்க தெரியாமல், தப்பு தப்பாக அறிக்கை விடுவார்.
உச்ச நீதிமன்றம் சொல்லியும் கர்நாடக கொடுக்கப்போவதில்லை. கழகத்தின் கையில் இருப்பது ஒரே ஒரு ஆயுதம். புள்ளி கூட்டணியிலிருந்து வெளியேற தைரியம் உள்ளதா. டெல்டாவில் கருகும் பயிர்களை காப்பதை விட கூட்டணியில் இருப்பது அவசியமா.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவர்கள் உண்மையில் அறமற்ற அரசியல் வித்தகர்கள் தான்