Load Image
Advertisement

ஐபோன் 15ஐ முதல் நபராக வாங்க 17 மணி நேரம் காத்திருந்த இளைஞர்!

The youth who waited 17 hours to buy Apple iPhone 15 as the first person!   ஐபோன் 15ஐ முதல் நபராக வாங்க 17 மணி நேரம் காத்திருந்த இளைஞர்!
ADVERTISEMENT
ஆப்பிளின் முதல் நேரடி கடை மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இன்று (செப்., 22) அவர்கள் ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டுள்ளனர். அதனை முதல் நபராக வாங்க ஆமதாபாத்தில் இருந்து கிளம்பி வந்து ஒரு இளைஞர் 17 மணி நேரம் காத்திருந்துள்ளார்.

ஆப்பிளின் ஐபோன் ஒரு சாதனமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது ஒரு அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது. அதனாலேயே தங்கள் பிராண்ட் போன்களை பார்த்து பார்த்து செதுக்கும் ஆப்பிள். இதுவரை ஐபோனின் 14 சீரிஸ்கள் வந்துள்ளன. ஒவ்வொன்றிலும் சிப், கேமரா, தோற்றம், செயலி, பாதுகாப்பு அம்சம் என மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்த வரிசையில் இன்று ஐபோன் 15 சீரிஸ் வெளியாகியுள்ளது.
Latest Tamil News
ஐபோன் 14ஐ போன்றே இதிலும் 4 மாடல்கள் உள்ளன. ஐபோன் 15, பிளஸ், புரோ, புரோ மேக்ஸ் என்ற மாடல்களில் கிடைக்கிறது. தற்போது 15 மற்றும் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ.5,000 மற்றும் புரோ, புரோ மேக்ஸ் மாடல்களுக்கு ரூ.6,000 தள்ளுபடி வழங்குகின்றனர்.

அதன்படி ஐபோன் 15 சீரிஸின் விலைகள்

ஐபோன் 15 - ரூ.74,900

ஐபோன் 15 பிளஸ் - ரூ.84,900

ஐபோன் 15 புரோ - ரூ.128,900

ஐபோன் 15 புரோ மேக்ஸ் - ரூ.153,900

உலக அளவில் விற்பனையாகும் பெரும்பாலான ஐபோன் மாடல்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 7 சதவீதத்தை கைப்பற்ற ஆப்பிள் முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இருப்பது போல் நேரடி கடைகளையும் திறக்க உள்ளனர். முதல் கடை மும்பையின் பந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் இந்தாண்டு ஏப்ரலில் திறக்கப்பட்டது. இரண்டாவது கடை டில்லியில் திறக்கப்பட்டது.
Latest Tamil News
மும்பையில் உள்ள கடைக்கு விற்பனைக்கு முந்தைய நாளான நேற்றில் இருந்தே ஐபோனை வாங்க வரிசைக்கட்ட துவங்கிவிட்டனர். அண்டை மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் 17 மணிநேரம் காத்திருந்து முதல் ஐபோன் 15 புரோ மேக்ஸ் மாடலை வாங்கியுள்ளார். அதனுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மற்றும் ஏர்பாடுகளை வாங்கியுள்ளார். முதல் நாளே ஐபோன் 15 வாங்கியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐபோன் 15 சீரிஸ் சிறப்பம்சங்கள்



6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே. 48 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஏ16 பையோனிக் சிப், ஐஓஎஸ் 17 இயங்குதளம், 128ஜிபி முதல் 1 டிபி வரையிலான மெமரி ஆகியவற்றை கொண்டுள்ளது. ஐபோன் 14 உடன் ஒப்பிடுகையில் சிப் மற்றும் கேமரா தரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.











வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement