Load Image
Advertisement

மோட்டோ ஜிபி போட்டியில் காட்சிப்படுத்தப்படும் ஓலா பைக்!

Ola motorcycle concepts to be showcased at MotoGP Bharat மோட்டோ ஜிபி போட்டியில் காட்சிப்படுத்தப்படும் ஓலா பைக்!
ADVERTISEMENT
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தனது புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் பைக்குகளை மோட்டோ ஜிபி பாரத் போட்டியில் காட்சிப்படுத்தவுள்ளது.


இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா இந்திய சந்தையில் தற்போது எஸ்1, எஸ்1 ப்ரோ, எஸ்1 ஏர் உள்ளிட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக அதிவேக எலெக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகம் செய்யும் பணிகளில் ஓலா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக மோட்டோ ஜிபி பாரத் என்ற மோட்டார் பைக் ரேஸ் போட்டி நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து நாளை துவங்குகிறது. இந்நிகழ்வில், டைமண்ட் ஹெட் Diamon Head), அட்வென்சர் (Adventure), க்ரூஸர்( Cruiser) மற்றும் ரோடுஸ்டார் (Roadster) ஆகிய நான்கு விதமான எலெக்ட்ரிக் பைக்குகளை காட்சிப்படுத்த ஓலா திட்டமிட்டுள்ளது.

Latest Tamil News

முக்கியமாக ஓலா நிறுவனம் மோட்டோ ஜிபி டிராக்கில் உள்ள பணியாளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக பயன்படுத்த தனது 150 ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல், மோட்டோ ஜிபி பாரத் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் ரசிகர்களை கவருவதற்காகவே ஓலா நிறுவனம் ஃபேன் சோன் நிகழ்வில் தனது எலெக்ட்ரிக் பைக்குகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Latest Tamil News
ஏற்கனவே ஓலா நிறுவனம் மூவ் ஒஎஸ் 4 என்ற புதிய அப்டேட்டை பீட்டா வெர்ஷனாக தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. இதில், ஹில் ஹோல்ட், சார்ஜிங் நேரக் கணிப்பு, சார்ஜிங் மற்றும் ரைடிங் ரேஞ்ச் ஹைப்பர் சார்ஜிங், காண்டேக்ட் சிங்கிங் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இடம்பெறும் எனக்கூறியுள்ளது. இந்த பைக்குகள் அனைத்தும் வரும் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுளதாகவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement