Load Image
Advertisement

பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பதே எங்கள் நோக்கம்: பிரதமர் மோடி

Women Reservation Bill: A strong government is needed to develop the country: PM Modi பெண்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பதே எங்கள் நோக்கம்: பிரதமர் மோடி
ADVERTISEMENT

புதுடில்லி: ‛‛பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் நலனுக்காகவும் உழைப்பதே எங்களது நோக்கம். அதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பார்லிமென்டின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
Latest Tamil News

பெருமை



நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் பாராட்டுகிறேன். நேற்றும், அதற்கு முந்தைய நாளும், நாம் புதிய வரலாற்றை படைத்துள்ளோம். இந்த சாதனையை படைக்க கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தது பெருமை அளிக்கிறது.

இந்த தருணம் வரலாற்றில் என்றும் நினைவில் கொள்ளப்படும். மசோதா பாஜ ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது பெருமை அளிக்கிறது. ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் மூலம். இந்தியாவின் எதிர்காலத்திற்கு புதிய சகாப்தம் படைக்கப்பட்டு உள்ளது.
Latest Tamil News

உறுதிமொழி



மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சாதாரண மசோதா அல்ல. புதிய இந்தியாவின் புதிய ஜனநாயக உறுதிப்பாட்டிற்கான அறிவிப்பு. மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு நான் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றியதற்கான சான்று.
Latest Tamil News
இந்தச் சட்டத்தின் மூலம், ஜனநாயகத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்ய கடந்த 3 தசாப்தங்களாக பாஜ., அனைத்து முயற்சிகளை மேற்கொண்டது. இது எங்களது உறுதிமொழி. இன்று அதை நிறைவேற்றி உள்ளது.

சில முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை மாற்றும் திறனைக் கொண்டுள்ளன. அத்தகைய ஒரு முடிவுக்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம்.

பெண்களுக்காக திட்டங்கள்



கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கான கட்டுப்பாடுகளை உடைக்க முயற்சி செய்கிறோம். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, செழிப்பு ஆகியவற்றுக்கான திட்டங்களைக் கொண்டு அவர்களை முன்னேற்ற பா.ஜ., அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
Latest Tamil News
இந்தியாவின் மகள்களை கைதூக்கிவிட பணியாற்றி வருகிறோம். பெண்களை கைதூக்கிவிட முத்தலாக் சட்டம் ரத்து செய்யப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 9 கோடி பெண்கள் பலனடைந்துள்ளனர்.

நிரூபணம்



மக்கள் முழுப் பெரும்பான்மையுடன் நிலையான வலிமையான அரசைத் தேர்வு செய்ததால் தான், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சாத்தியமானது. நாட்டை முன்னெடுத்துச் செல்ல பெரும்பான்மையுடன் கூடிய உறுதியான அரசு தேவை என்பதை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிரூபிக்கிறது. யாருடைய அரசியல் சுயநலன்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்க விட மாட்டோம்.
Latest Tamil News
இதற்கு முன்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் விவாதத்திற்கு வந்த போது, அதனை நிறைவேற்ற எந்த முயற்சியும் அளிக்கவில்லை. ஆண்டாண்டு காலமாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக நாடு காத்திருந்தது;

அந்த மசோதாவை பார்லியின் இரு அவையிலும் நிறைவேற்றியதன் மூலம் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை செய்து காட்டி விட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


காலில் விழுந்த வானதி; கண்டித்த மோடி


பிரதமர் மோடி பா.ஜ., அலுவலகத்திற்கு வந்தபோது அவரை வானதி சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் காலை தொட்டு வணங்கினார். இதனையடுத்து மோடி சற்று கோபத்துடன் இவ்வாறு செய்யக்கூடாது என கண்டித்தார்.



வாசகர் கருத்து (11)

  • sankaran - hyderabad,இந்தியா

    ஒரு நிர்மலா, ஒரு JJ, ஒரு மம்தா வ தாங்க முடியல...emergency ய கொண்டு வந்தது இந்திரா...இதுல வேற 33% இட ஒதுக்கீடு...நாடு தாங்குமா...

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    வீட்டிலே எலி. வெளியிலே புலி

  • அப்புசாமி -

    தலைவிக்கே இன்னும் அழைப்பு இல்லே. மத்த பெண்களை எப்போ முன்னேத்தி.. 2047 ல பாக்கலாம்.

  • Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா

    பெண்கள் ஐடா ஒதுக்கீடுஎனப த்தெல்லாம் சும்மா ஒரு பயணம் கிடையாது. நட்டு முன்னேற விலைவாசி குறைக்கணும் சிறு தொழில் மேம்படுத்தனும் , தண்ணீர் பிரசயானி தீர்க்கணும் டோல்கே கொள்ளை தடுக்கணும் ரயில் நிலையங்களில் பார்க்கிங் 20 நிமிடம் 10 ரூபாய் 20 ரூபாய் கொள்ளை தடுக்கணும் அதை இல்லம் செய்யாமல் சும்மா மகளீர் ஐடா ஒதுக்கீடு அப்படினு படம் காட்டுகிறார் சுத்த வேஸ்ட்

  • குமரி குருவி -

    எல்லோரும் நலம் வாழ நான்பாடுபடுவேன்.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement