ADVERTISEMENT
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி ஏற்கனவே சபாநாயகர் அப்பாவுக்கு அதிமுக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (செப்.,22) அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயராமன் உள்ளிட்ட எம்எல்ஏ.,க்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து நினைவூட்டல் கடிதம் வழங்கினர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி, அதிமுக சார்பில் இதுவரை 3 முறை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. பழனிசாமி தலைமையில் அதிமுக என்றும், பொதுச்செயலாளர் பழனிசாமி என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அதனை சுட்டிக்காட்டியுள்ளோம். பதில் கடிதம் வழங்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினோம். சபாநாயகரின் பதிலை வைத்து அடுத்தக்கட்ட நகர்வை பழனிசாமி எடுப்பார்' என்றனர்.
வாசகர் கருத்து (2)
Maanilathil Edappadi aatchi irukattum ,maththiyil Modi aatchi varattum more seats in Loksabha for bjp ,more seats allocated for ADMK in state elections
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
உங்க ஆட்சியில் சபாநாயகர் எப்படி இருந்தாரு? உங்க ஆட்சியை எதிர்த்து ஓட்டு போட்ட ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாரு... அதை அப்படியே கிடப்பில்போட்டிருந்தாரே... உங்களுக்கு வந்தா ரத்தம்.. மற்றவங்களுக்கு தக்காளி சட்னியோ...?