திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் நெருங்கி பழகினார். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை, 'லவ் ஜிகாத்' எனும் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார். இதற்கு, இளம்பெண் உடன்படவில்லை. இதனால், காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண், பெங்களூரு போலீசார் உதவியை நாடினார். பின், போலீசில் புகார் அளித்தார். மொஜீப் அஷ்ரப் பெய்க் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவானது. இதையடுத்து, அவர் தலைமறைவாகி விட்டார். தலைமறைவான மொஜீப் காஷ்மீரில் பதுங்கி இருக்கலாம் என்பதால், அவரை தேடி ஹெப்பகோடி போலீசார் காஷ்மீருக்கு சென்றுள்ளனர்.
பெண் எஸ்.ஐ.,யிடம் அத்துமீறல்: 2 போலீசார் கைது
உத்தர பிரதேசத்தின், சம்பல் மாவட்டத்தின் சண்டாசி பகுதி காவல் நிலையத்தில், பெண் ஒருவர் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பவான் சவுத்ரி மற்றும் ரவீந்திரா ஆகிய இரு போலீசார், அந்த பெண் எஸ்.ஐ.,யை காரில் பின்தொடர்ந்து சென்று, அவரிடம் அத்துமீறி நடந்தனர்; இது குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது எனவும் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, பெண் எஸ்.ஐ., அளித்த புகாரின் அடிப்படையில் பவான், ரவீந்திரா ஆகிய இரு போலீசாரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பெண்ணுக்கு தொல்லை: ஆம்புலன்ஸ் உதவியாளர் கைது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே செல்லுாரை சேர்ந்தவர் பாலமுருகன், 38. இவர் 108 ஆம்புலன்ஸ் உதவி மருத்துவ டெக்னீசியனாக பணிபுரிகிறார். செப்.,18ல் திருவாடானை அருகே 28 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயாருடன், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்துவரப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார்.
அப்போது அந்த பெண்ணை தனியாக கழிப்பறைக்கு அழைத்துச் சென்ற பாலமுருகன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.
மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம், கொத்தப்பட்டியை சேர்ந்த 16 வயது மாணவி, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்தார். அருகே இருந்த மரக்கிளையில் விழுந்து கீழே விழுந்ததால் வலது காலில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் கூறும் போது, 'காதல் விவகாரத்தில் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்தார்' என்றனர்.
ரூ.15 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய 'போர்மென்' கைது
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் சந்துரு. தனது இடத்தை வாடகைக்கு விட முடிவு செய்தார். அதற்காக மின் இணைப்பு கேட்டு வில்லாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் செப்.,4ல் விண்ணப்பித்தார். இருவாரங்களாகியும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின் அலுவலகத்தை அணுகினார். அப்போது சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மின்வாரிய போர்மேன் வேல்முருகன், 'அதிகாரிகளுக்கு எல்லாம் தரவேண்டும்' எனக்கூறி ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசில் சந்துரு புகார் செய்தார். நேற்று மாலை மின் அலுவலகத்தில் சந்துருவிடம் வேல்முருகன் ரூ.15 ஆயிரம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் பாரதிப்ரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர் வெட்டி கொலை: டிராவல்ஸ் உரிமையாளர் கைது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரை சேர்ந்தவர் லாரி டிரைவர் செல்வம், 55. இவரது மனைவி சத்யா, 40. இவருடன் அதே பகுதியை சேர்ந்த, டிராவல்ஸ் உரிமையாளர் செல்வராஜ், 58, பழகினார். இதையறிந்த செல்வராஜ் மனைவி தாரா, கணவரை கண்டித்தார். 2017ல் தாராவை அடித்துக்கொலை செய்த வழக்கில் கைதான செல்வராஜ், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்தார்.
இந்நிலையில் சத்யா, அவரது கணவருடன் தகராறு செய்து பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு செல்வத்தை அரிவாளால் செல்வராஜ் கொடூரமாக வெட்டி, கொலை செய்தார். வீரகனுார் போலீசார், செல்வராஜை நேற்று கைது செய்தனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி; குழந்தையை கொன்ற கொடூரன் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுார் அடுத்த திருப்பாலபந்தல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி 24 இவரது மனைவி ஜெகதீஸ்வரி 22. இவர்களுக்கு திருமூர்த்தி 2 என்ற மகன் 1 மாத பெண் குழந்தை உள்ளனர். கடந்த 17ம் தேதி மாலை வீட்டின் முன் விளையாடிய சிறுவன் திருமூர்த்தியை திடீரென காணவில்லை. இது குறித்த புகாரின் படி திருப்பாலபந்தல் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அவரது வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்சில் திருமூர்த்தியின் உடல் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டது. குருமூர்த்தியின் தம்பி ராஜேஷ் 22 என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர் கூறியதாவது: அண்ணி ஜெகதீஸ்வரியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தினேன். மறுத்ததால் அவரை நிம்மதியாக வாழ விடக் கூடாது என்ற ஆத்திரத்தில் சிறுவன் திருமூர்த்தியின் வாயில் துணியை வைத்து கொலை செய்தேன். சிறுவன் உடலை ஸ்பீக்கர் பாக்சிற்குள் வைத்து மூடி விட்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் வீட்டிலேயே வழக்கம் போல் இருந்து வந்தேன். வ்வாறு ராஜேஷ் தெரிவித்தார். அதையடுத்து போலீசார் காம கொடூரன் ராஜேஷை கைது செய்து சிறையில் நேற்று அடைத்தனர்.
வாசகர் கருத்து (3)
எல்லா முஸ்லீம் - இந்து திருமணங்களும் லவ் ஜிகாத் தானே? சிலர் வலிந்து முஸ்லிமாக மாற்றபடுகின்றனர், பிறர் வேறு விதமாக மாற்றப்படுகின்றனர். பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் முஸ்லீம் மட்டும் தான்.
அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவி என்றால், காதல் விவகாரம். அதுவே பணக்கார வீட்டுப் பெண் என்றால் மனஉளைச்சல். என்னமோ போங்க.
நெருங்கிப் பழக இஸ்லாத்தில் அனுமதி கிடையாதே. அப்போ ஜிஹாதி😡 தான்.