சென்னை லயோலா கல்லுாரி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஒட்டி 'சட்டசபை நாயகர் கலைஞர்' என்ற தலைப்பில் கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
அந்த நிலையில் இருந்து எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என பார்க்க வேண்டும். நீதிக் கட்சி முதன்முதலாக பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை கொண்டு வந்தது. கருணாநிதி ஆற்றிய பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் படிக்க சட்டம் கொண்டு வந்தார்; பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்தார்.
திருமண உதவித் தொகை திட்டத்தை கொண்டு வந்து பெண்கள் படிக்க உதவினார். இந்தியாவில் பட்டம் படித்த பெண்களின் சராசரி 26 சதவீதம் என்றால் தமிழகத்தில் சராசரி, 78 சதவீதம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி; கருணாநிதி செய்த சாதனை.
இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பே பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் இருந்தன. ஆனால் படிக்க நான்கு சதவீதம் பேருக்கு மட்டும் அனுமதி; மீதி 96 சதவீதம் ஹிந்துக்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்தது அருட்தந்தையர், அருட்சகோதரிகள், சகோதரர்கள் தான்.
கிறிஸ்தவ மத போதகர்கள் பள்ளிகளை ஆரம்பித்து 'ஜாதி, மதம் இல்லை. அனைவரும் கல்வி கற்க வாருங்கள்' என்றனர். அதன் அடிப்படையில் தமிழகம் இந்த வளர்ச்சி அடைந்துள்ளது. அதை முதல் புள்ளியாக எடுத்து திராவிட இயக்கங்கள் இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்
வாசகர் கருத்து (255)
தொன்றுதொட்டு இருந்துவந்த இந்துக்களின் அனைவருக்குமான நம் பக்தி இலக்கியங்களையும், வேத நெறிகள் இதிகாஸ புராண மற்றும் நவீன அறிவியல் குருகுல கல்விமுறைகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டு பைபிளையும் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியையும் நவீன கல்விமுறையில் புகுத்தி நம் பாரத நாட்டின் மற்றும் தமிழகத்தின் தொன்மையான சங்ககால வரலாறுகளையூம், விஜய நகர இந்து பேரரசுகளின் பெருமைகளையும் இந்துக்கள் தெரிந்துகொள்ளாத வகையில் கல்வி முறைகளை மாற்றி அமைத்தது ஆங்கிலேய மெகாலேயின் கல்வி முறை. அதனாலேதான் மெய்ஞ்ஞானத்தில் மகத்தான சாதனைகளை படைத்த ஆழ்வார்களையும் நாயன்மார்களையும், தமிழ் சித்தர்களின் வரலாற்றையும் ராமானுஜர், வள்ளலார் போன்ற சமய புரட்சியாளர்களின் வரலாற்றையும் நாம் தெரிந்துக் கொள்ளக் கூடாது என்று கிறித்துவ மிஷனரி சூழ்ச்சியாளர்கள் தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை தமிழர்கள் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொண்டு கிறித்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி வலையில் மாட்டாமல் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். இன்று சமூக வலைத்தளம் வாயிலாக நாம் பல செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்
மைக்கு முன்னாடி வந்தாலே உளறி கொட்டுவதே வேலையா போச்சு..
1967-க்கு முன்பு வரை - அதாவது காமராஜர் காலம் வரை - அரசு பள்ளிகள் - அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் கிறிஸ்துவ பள்ளிகளிலும் கூட, படித்தவர்கள், அனைவரும் ஓரளவு திருக்குறள், திருவாசகம், சிவபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், கர்நாட சங்கீதம், ஓவியம், மற்றும் பல விளையாட்டு திறமைகள் கொண்டவர்களாகவும் - இருந்தனர். அங்கே படித்து உயர்கல்விகளுக்கு சென்றவர்கள்தான் தற்காலத்தில் தேசத்தின் கட்டமைப்பாளர்களாக இருக்கிறார்கள் - - எப்போது திமுக - கருணாநிதி என்ற தீயசக்திகள் தோன்றினவோ, தமிழர்களிடம் இருந்து தமிழ் மொழி - ஒழுக்கம் - கலாசாரம் - பண்பாடு - அனைத்தும் பறந்து விட்டன - - இதற்கு பள்ளிகளை குறை சொல்ல முடியாது - தீமுகவின் கொள்கை திட்டங்கள்தான் காரணம் - திட்டமிட்டே அனைத்தும் மக்களிடம் இருந்து பறிக்கப் பட்டன - இப்போது ஒன்றிரண்டு திருக்குறள் கூட தெரியாத - தமிழ் மாதம் பன்னிரண்டு எது என்று கூட 90-சதவீத தமிழர்களுக்கு தெரியாமல் செய்த - மற்றும் போதைக்கு அடிமைப்படுத்தப்பட்ட - பெருமை திமுக மற்றும் கருணாநிதியையே சாரும் ஆனால் கருணாநிதியையே தேவலை என்னும் அளவுக்கு, அவரை மிக நல்லவர் ஆக்கி கொண்டிருக்கிறார்கள் அவரது வாரிசுகள் . . இப்போதெல்லாம் மது-சாராயம் மட்டுமல்ல கள்ள சாராயம், கஞ்சா, போதை வஸ்துக்கள், போதை மாத்திரைகள், ஊசிகள், இன்னும் என்னென்னவெல்லாமோ - சீரழிக்கும் வஸ்துக்கள் சாதாரணமாக நாடெங்கும் தாராளமாக அனைத்து தொழிற்கூடங்களிலும் வடநாட்டவர் வேலை செய்வதும் அதன் வெளியே தமிழர்கள் போதையில் விழுந்து கிடப்பதும்-தான் நடக்கின்றது, பெண்கள் நிலை மிக மிக மோசமாகி கொண்டிருக்கிறது . . . ஆனால் அவர்கள் கவனத்தை திருப்ப இலவச பணம் கொடுத்து ஏமாற்றி ஓட்டை பறிக்க நினைக்கிறது - தீயமுக
இவரை போல அறிவிலிகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது.
ஆதியில் குருகுலம் கல்வி,பிறகு தின்னைப் பள்ளிகள், பின் மரத்தடி பள்ளிகள் என்று படிப்படியாக வளர்ந்தன. கிருஸ்துவ பள்ளிகளில் மதப்பிரச்சாரம் நடக்கவில்லை என்று கூறமுடியுமா ?