ADVERTISEMENT
கூடலுார்,--கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.250 ல் இருந்து 100 ஆக குறைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வாகமண் உள்ளது. இங்கு பச்சை பசேல் என்று இருக்கும் மலைக் குன்றுகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இது தவிர பாரா கிளைடிங், அட்வென்சர் ஜோன், பர்மா பிரிட்ஜ், ரோஸ் பார்க் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 120 அடி நீளத்தில் கண்ணாடி பாலம் கேரள சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது செப். 6ல் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. மிக நீளமான கண்ணாடி பாலத்தை பார்வையிட கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. துவக்கத்தில் நுழைவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் ரூ.250 ஆக குறைக்கப்பட்டது.
கண்ணாடி பாலத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நுழைவுக் கட்டணம் ரூ.250 அதிகமாக உள்ளதாகவும் அதை 100 ஆக குறைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!