Load Image
Advertisement

குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்

Muruga...varam dha... to run city buses from the hill : bus stand not functioning for 12 years    குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு  முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்
ADVERTISEMENT
திருப்பரங்குன்றம்,- -- திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டும் முன்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார், அண்ணா, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் சென்று வந்தன. ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் ஊருக்குள் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேம்பால பணிகள் முடிந்து சில ஆண்டுகளில் ஒருபுறம் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. தென்பரங்குன்றம், சம்பக்குளம் செல்லும் அரசு டவுன் பஸ்கள் மேலரத வீதி, பெரியரத வீதி, கிரிவலப் பாதை வழியாக சென்று திரும்பின. திருநகர், திருமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ்கள் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தின் மற்றொரு பகுதியிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை.

தென்பரங்குன்றத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் பகுதி, கோடாங்கி தோப்பு தெரு, கோட்டை தெரு, தென்பரங்குன்றம் பகுதி மக்கள் மதுரை மற்றும் வெளியூர்களுக்கு செல்ல மூன்று கி.மீ., நடந்து புளியமரம் பஸ் ஸ்டாப்பிற்கு சென்று தான் பஸ் ஏறிச் செல்கின்றனர். இரவு நேரங்களில் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

பல ஆண்டுகளாக அரசு டவுன் பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன. திருப்பரங்குன்றத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மீண்டும் அரசு டவுன் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    ஒழுங்கின்மையே இந்தியாவின் லட்சணம். கண்டாமேனிக்கி வண்டிகளை நிறுத்திட்டு போயிருக்காங்க பாருங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement