ADVERTISEMENT
விழுப்புரம்- சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில், சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு, விழுப்புரம் வந்தடைந்தது.
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை, வரும் 24ம் தேதி துவங்க உள்ளது.
செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில், விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று நெல்லை செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நெல்லையில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மதியம் 1:50 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது.
மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. 83.30 கி.மீ., வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில், சென்னை - நெல்லை இடையேயான 652.49 கி.மீ., துாரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது.
இந்த ரயில் சேவை, வரும் 24ம் தேதி நெல்லையில் இருந்து துவங்குகிறது. இந்நிலையில், சென்னை - நெல்லை இடையே நேற்று வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.
காலை 7:35 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இதில் ரயில்வே அதிகாரிகள் மட்டுமே பயணித்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தை காலை 9:20 மணிக்கு வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் இருந்த பலர், ரயிலை ஆர்வத்துடன் பார்வையிட்டு, 'செல்பி' எடுத்தனர்.
ரயில் 9:25 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3:00 மணிக்கு நெல்லை சென்றடைந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!