அ.தி.மு.க., கூட்டணி விஷயத்தில், பா.ஜ., தேசிய தலைமை தெளிவான முடிவு சொல்லாததால், தமிழக பா.ஜ., தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின், ஊழல் விஷயத்தில், அவர் அ.தி.மு.க.,வையும் விமர்சிப்பது, பிரச்னையாகி உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க விரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மாதங்களுக்கு முன், பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., தலைவர்களை, டில்லிக்கு அழைத்து பேசினார்; அப்போது அண்ணாமலையும் உடனிருந்தார்.
இரு கட்சிகளின் உறவில் இருந்த உரசலை போக்கி, தேர்தல் கூட்டணி குறித்து பேசி, அமித்ஷா இறுதி செய்தார். அங்கு அண்ணாமலை இருந்தாலும், பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க., தலைவர்களிடம், அவர் முகம் கொடுத்து பேசவில்லை.
இதை தொடர்ந்து, இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், பா.ஜ., தேசிய தலைமை, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
அதனால், இரு கட்சிகளுக்கும் இடையே நிலவிய மோதல், சமீபத்தில் உச்சகட்டத்தை அடைந்தது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை பேசியதை, அ.தி.மு.க., தலைவர்கள் கண்டித்தனர்; கூட்டணி முறிந்ததாக வெளிப்படையாகவும் அறிவித்தனர். இந்நிலையிலும், பா.ஜ., தேசிய தலைமை, அ.தி.மு.க., கூட்டணி தொடர வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், அதை முதலில் சொல்ல வேண்டிய அண்ணாமலையிடம் தெளிவாக கூறாமல் அமைதி காக்கிறது.
இதனால், தமிழக பா.ஜ.,வின் பிற தலைவர்கள், என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறுகின்றனர். இது தொடர்பாக சிலர், அமித் ஷா, நட்டாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களிடம், 'கூட்டணி தொடர்கிறது. அதற்கேற்ப பேசுங்கள்' என்று
கூறியுள்ளனர். இதையடுத்து, அண்ணாமலை சொல்வது போல செயல்படுவதா; மேலிட தலைவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுவதா என்பது புரியாமல், தமிழக பா.ஜ.,வினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., குழப்பம் ஒருபக்கம் இருக்க, அ.தி.மு.க., தலைமையும் அதேபோன்று குழப்புவதாக, அக்கட்சியினரும் புலம்புகின்றனர்.அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:அண்ணாமலையை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் விமர்சனம் செய்தது,
பழனிசாமி உத்தரவுபடி தான்.
பழனிசாமி டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே, அண்ணாமலை குறித்து பேசி, ஒரு முடிவு எடுத்து இருக்கலாம்.அதை செய்யாமல், அண்ணாமலையை விமர்சிக்கும்படி கட்சியினரிடம் கூற, அவர்கள் ஒரு கட்டத்தில், 'பா.ஜ., உடன் கூட்டணி இல்லை' என்று தெரிவித்து
விட்டனர். மீண்டும் கூட்டணி என்றால், தேர்தல் பணிக்காக பா.ஜ.,வினருடன் எப்படி இணைந்து செயலாற்றுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்துக்கு பழனிசாமி தான் காரணம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின். - நமது நிருபர் -
வாசகர் கருத்து (22)
அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி இட்டு படு தோல்வி || இப்பவும் அதிமுக பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று தைரியமாக அறிவிக்க சொல்லுங்க பார்க்கலாம் || அவர்களால் முடியாது || பிஜேபி இங்குள்ள வெற்றி தோல்வி பற்றி கவலை பட வில்லை || நாங்கள் மூன்றாவது அணி அமைத்து அதிமுகவை தொடர் தோல்வி அடைய செய்வோம் || பிஜேபி இல்லாமல் தனித்து போட்டி இட்டு உள்ளாட்சி தேர்தலில் வாங்கிய தோல்வியை அதிமுக மறக்கவில்லை
சிறுபான்மை வாக்குகளை இழந்துவிடுவோமோ என்கிற பயம் அதிமுகவில் அனைத்து மட்டத்திலும் உள்ளது .... இருப்பினும் அவர்களைக் கட்டி இழுத்த்து கூட்டணி வைக்கும் பாஜகவுக்கு வெட்கமில்லை ....
புள்ளி வைத்த கூட்டணியை "இண்டி" அலயன்ஸ் அதாவது "இண்டி" ... கூட்டணி என்றுதான் அழைக்க வேண்டும் என்று மத்திய பாஜ.க தலைமை சொல்லிவிட்டது.
குடும்ப சண்டை போன்றது இந்த கூட்டணி சண்டை என்று சொல்லப்பட்டாலும் இது தீர்ந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. பா.ஜ.க மேலிடம் பிரச்சினையின் வேர் என்ன என்பதை கூர்ந்து ஆராய வேண்டும். மேம்போக்காக மேல்மட்டத்தலைவர்கள் மட்டுமே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் பிரச்சினை இல்லை. கடைநிலை தொண்டர்கள் வரை உள்ள பிரச்சினை.
தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க