Load Image
Advertisement

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: ராஜ்யசபாவிலும் நிறைவேறியது:

Womens Reservation Bill: Also passed in Rajya Sabha:   மகளிர் இட ஒதுக்கீடு மசோதா:  ராஜ்யசபாவிலும் நிறைவேறியது:
ADVERTISEMENT
புதுடில்லி: மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குரல்வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் செப்.18-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய பார்லிமென்டில் துவங்கியது. இதில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளில் மகளிர்க்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் மசோதா பாராளுமன்ற புதிய கட்டடத்தின் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரின் போது முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு. விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து லோக்சபாவில் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 454 எம்.பி.,க்களும், எதிராக 2 எம்.பி..,க்களும் வாக்களித்தனர். இதையடுத்து பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடந்தது.

பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசியது,

* மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெண்கள் அதிகாரத்திற்கு புதிய ஊக்கத்தை தரும்.


* மசோதா நிறைவேற ஒரு மித்த கருத்துடன் ஆதரவு அளித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மசோதா நிறைவேறியது அரசியல் கட்சிகளின் நேர் மறை சிந்தனையை காட்டுகிறது. மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டு மக்களிடையேபுதிய நம்பி்கையை ஏற்படு்த்தும் மகளிருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் புதிய ஆற்றலை கொடுக்கும்.

என்றார்.

காங்.,தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது என்றார்.


ராஜ்யசபாவில் மசோதா மீது 11மணி நேரம் தொடர்ந்து விவாதம் நடைபெ்ற்றது. பின்னர் குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் மசோதாவிற்கு எந்த எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 215 எம்.பி.க்களும் ஆதரவு அளித்தனர். இதையடுத்து எதிர்ப்பின்றி ராஜ்யசபாவிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.


வாசகர் கருத்து (3)

  • duruvasar - indraprastham,இந்தியா

    இங்கே சந்துரு (சமாஜ்வாதி), மந்துரு ( ஆர்ஜேடி) என இரு மானஸ்தர்கள் இருந்தார்களே எங்க போனாங்களோ ?

  • ஆரூர் ரங் -

    அடுத்து நாடு முழுவதும் உள்ள மூன்றில் இரண்டு பங்கு சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.😮‍💨 எதிர்கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

  • Chennaivaasi - New York,யூ.எஸ்.ஏ

    Kulat

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்