புதுடில்லி: பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கெட்ட பெயர் ஏற்படாமல் நற்பெயரை காக்க வேண்டும் என கனடா அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.
அச்சுறுத்தல்
கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. குற்றவாளிகள் புகலிடமாக கனடா உள்ளது என்ற கெட்ட பெயர் ஏற்படாமல் கனடா அரசு செயல்பட வேண்டும்.
பொய் குற்றச்சாட்டு
கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்நாட்டின் பொறுப்பு. அரசியல் காரணங்களுக்காக இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுகளை கனடா முன்வைக்கிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். இவ்வாறு அரித்தம் பாக்சி கூறினார்.
வாசகர் கருத்து (12)
இந்திராகாந்தி தன்னை ஸ்திரப்படுத்த செய்த ஏற்பாடு இன்று நம் தலைமீது வந்து விடிகிறது. அந்த பரம்பரையில் வந்த வின்சி கூட பாக்கி தீவிரவாதிகள் போன்றோருடன்தான் அதிக சந்திப்புகள் நடத்துகிறார். கூட்டிக்கழித்துப்பார்த்தால் தேசவிரோத காங்கிரசை தடை செய்யத்தான் வேண்டும்.
தீவிர வாதிகள் குண்டு வைத்த ஏர் இந்திய விமானத்தில் என் மாமாவின் குடும்பம் வந்து மாமாவின் WAITLIST கடைசி நிமிடம் CONFIRM ஆகாததால் தனது முழு குடும்பத்தையும் ( மனைவி 3 மக்கள் ) ஒரே நொடியில் தொலைத்து பைத்தியமாகி தாடியுடன் கோவிலில் கடவுளை ஏசிக்கொண்டு வாழ்ந்த அவலத்தை பார்த்ததிலிருந்து காலிஸ்தான் என்ற வார்த்தையோ கனடா என்ற வார்த்தையோ கேட்டாலே கோபம் வர இன்னும் வாழ்கிறோம் ( நல்ல வேலை அந்த மாமா தற்போது இல்லை.தன்னுடைய சம்பாத்தியம் முழுதையும் சற்று சித்தம் தெளிந்த வேளையில் அநாதை இல்லத்துக்கு அளித்துவிட்டார். எங்கள் தாயின் குடும்பத்தில் பல இளைய தலை முறையினர் இருந்தாலும் நைஜீரியா போனாலும் கனடா போக மாட்டோம் .
இந்தியாவிலிருந்து பஞ்சாப் மக்கள் அதிகம் பேர் அங்கு வேலை வாய்ப்பாக்குக்காகவும், வெளி நாட்டினரை வரவேற்பதில் தாராள மனோ பாவத்தைக் காட்டிய கனடிய அரசாங்கத்தின் போக்கைப் பயன்படுத்தியும் அங்கே 90"களிலேயே உள்ளே நுழைந்தார்கள் அவர்களில் பலர் இப்போது அங்கே குடியுரிமை கூட பெற்றிருக்கக் கூடும். இது போன்ற மக்களின் ஆதரவை தவறாகப் பயன்படுத்தி பல காலிஸ்தானிய தீவிர வாதிகள் அங்கே புகலிடம் பெற்று சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. பஞ்சாபிய மொழியில் தாங்கள்'தொப்புள் கொடி உறவுகள்' என இங்கே நம் நாட்டில் சீக்கியர்களின் அனுதாபத்தைப் பெற முயல்கிறார்கள். இதற்கும் 1991க்கு முன்பு ராஜிவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சி நடைபெறு முன்பு தமிழ் நாட்டில் நிலவிய சூழலையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எப்படி பஞ்சாபிலிருந்து அதிகம் சீக்கியர்கள் கனடா சென்றார்களோ அதே போல ஸ்ரீலங்காவிலிருந்து இலங்கைத் தமிழர்களும், சிங்களவர்களும் தங்கள் உயிருக்குப் பயந்து பெருமளவில் குடியேறியது கனடாவில்தான் என்பது வியப்பூட்டும் செய்தி. எனவே இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை என்பது சரியான நேரத்தில், சரியான விதத்தில் வெளியாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
காலிஸ்தான், இந்திரா காந்தி அகாலியை எதிர்க்க கலஸ்தானியை வளர்த்தார் என்பதை ஒரு தீவிரமான குறிப்பில் புரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதிகளின் புகலிடம் கனடா. கனடா பிரதமர் ஒரு பயங்கரவாதி.