சென்னை: தேர்தல் நெருங்கும்போது மகளிருக்கு திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பது, தேர்தலுக்கான மறைமுக லஞ்சம்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சீமான் கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு இவ்வளவு நாட்கள் ஏன் கொண்டுவரவில்லை. பாரத மாதா கி ஜெய் என பேசும் பிரதமர் மோடி, அந்த மாதாவுக்கு ஏன் 50 சதவீதம் ஏன் கொடுக்கவில்லை? சரி, 33 சதவீதம் கொடுத்துள்ளீர்கள்; ஆட்சியில் இருந்த இந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஏன் கொடுக்கவில்லை? தேர்தல் வரும்போது மட்டும் உங்களுக்கு பெண்கள் மேல் அக்கறை.
பார்லி., தொகுதிகள்
இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடியாக இருந்தபோது எவ்வளவு பார்லி., தொகுதி இருக்கிறதோ, அதே அளவில்தான் 130 கோடி மக்கள்தொகை இருக்கும்போதும் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சிறுபான்மை பெண்களை சேர்க்கவில்லை. அவர்கள் பெண்கள் இல்லையா? அவர்கள் எல்லாம் பாரத மாதா இல்லையா? இந்த மசோதாவை நிறைவேற்ற கடவுள் தன்னை அனுப்பியதாக பிரதமர் கூறுகிறார்.
பெண்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்க வேண்டும். தேர்தல் வரும்போது தான் எல்லாம் வருகிறது. மக்களின் தேவையை அறிந்து அரசியல் நடத்தியதாக இந்த நாட்டில் யாரும் இல்லை. முழுவதும் தேர்தல் அரசியலையே செய்கின்றனர்.
திமுக
திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இவ்வளவு நாட்கள் நோட்டை அச்சடித்தீர்களா? இதற்காக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள். அந்த பணத்தில் பெண்களுக்கு தற்சார்பாக உழைத்திடும் வகையில் தொழிலை கற்றுக்கொடுக்கலாம். மாதம் ரூ.1000 யாராவது கேட்டார்களா? தேர்தல் வரும்போது இதனை கொடுப்பது மறைமுகமான லஞ்சம் தான். இவ்வாறு சீமான் கூறினார்.
வாசகர் கருத்து (23)
விஜயலக்ஷ்மி ரிட்டர்ன்ஸ் எஸ்கேப்பு ஆகிடு.
ஆயிரம் ரூவா உரிமைத்தொகை கொடுக்கும்போது இலங்கை சென்றிருந்தீர்களா? இல்லை கேஸ் வாபஸ் வாங்க அடக்கி வாசித்தீர்களா?
இந்த மகளிர் உரிமை தொகையும், மகளிர் ஒதுக்கீடும் ரத்து செய்வோம் என்று உறுதி அளிக்கும் கட்சிக்கே என் ஓட்டு. இரண்டுமே நாட்டை நாசமாக்கும் வழிகள்.
நாங்கள் ஒண்ணுக்கும் லஞ்சம் வாங்களே எல்லாம் நாங்கள் அரசுக்கு செலுத்திய வரிப்பணம் இது / எங்களுக்கு உரிமை தொகையாக திருப்பி தருகிறார்கள் /முதல்வர் மகளீர் உரிமை தொகை என்று சரியான பெயர் சூட்டி உள்ளார்
திருமங்கலம் பார்முலாவின் சட்டரீதியான விரிவாக்கம் தான் மகளீர் உரிமை தொகை. 😜 550 புளுகு மூட்டை வாக்குறுதிகளை அள்ளி வீசும் போதே எங்களுக்கு புரிந்தது. 😜 உனக்கு புரியல்லே. கோமாளி