ADVERTISEMENT
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை அழைக்காதது ஏன்? என்ற காங்கிரஸ் கேள்விக்கு, அரசியலமைப்பை போய் படியுங்கள் உங்களுக்கு திட்டவட்டமாக தெரியும். பார்லி., ஒவ்வொரு கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்றுவார் அது தான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது என ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் பதில் அளித்தார்.
புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி கலந்து கொள்ளாதது அவமானம் என காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் ராஜ்யசபாவில் பேசுகையில் குறிப்பிட்டார். இதற்கு, ஜக்தீப் தன்கர் அளித்த பதில்: குறைகளை கூறி வர்த்தகம் செய்ய முடியாது.
நான் மிகத் தெளிவாகக் கூறுகிறேன். துணை ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதிக்கு நாட்டில் மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை.
கடந்த மூன்று நாட்களில் நீங்கள் பார்த்தது இதுதான். முன்னணி எதிர்க்கட்சி உறுப்பினராக நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். அதை முதலில் கண்டுபிடியுங்கள். நீங்கள் ஜனாதிபதியை தேர்வு செய்யும் போது, ஆதரவு அளிக்கவில்லை.
அரசியலமைப்பை போய் படியுங்கள் உங்களுக்கு திட்டவட்டமாக தெரியும். பார்லி., ஒவ்வொரு கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்றுவார் அது தான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தின் படி தனது பணியை செய்வார். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பதில் அளித்தார்.
வாசகர் கருத்து (24)
காங்கிரஸில் பப்பு முதல் எல்லாம் அரை வேக்காடு
காங்கிரஸ் ஜனநாயகத்தை எமர்ஜென்ஸி என்ற பெயரில் கருவறுத்த கட்சி. இந்த காங்கிரஸ் தடை செய்ய வேண்டிய கட்சி.
மம்தா பானர்ஜியை இவர் கவர்னர் ஆக இருந்த வரை, ஓட ஓட விரட்டினார். இவர் காலத்தில் தான் அங்கு மமம்தா அரசுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் ஆளுநர் ஸ்டாலின் அரசுக்கு எதிராக இவரை போல செயல்பட வேண்டும்.
அவனுங்க அப்படியே படித்து கிழித்து விட்டாலும்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அப்ப ஏங்க புது பாராளுமன்ற முதல் நாள் அமர்வுக்கு கூட ஜனாதிபதிய கூப்பிடல..???? ???? என்ன சொல்றீங்க நீங்க இதுக்கு