Load Image
Advertisement

பேச்சு சுதந்திரம் பெயரில் வெறுப்பு குற்றங்கள்: கனடா ஆளுங்கட்சி எம்.பி., வேதனை

Hate crime allowed in name of…: Indo-Canadian MP slams party leader Trudeau பேச்சு சுதந்திரம் பெயரில் வெறுப்பு குற்றங்கள்: கனடா ஆளுங்கட்சி எம்.பி., வேதனை
ADVERTISEMENT

ஒட்டாவா: ‛‛ கனடாவில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்துக்களை குறி வைத்து வெறுப்பு குற்றங்கள் நடக்கிறது '' என அந்நாட்டு ஆளுங்கட்சி எம்.பி.,யான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா கூறியுள்ளார்.


கனடாவை ஆளும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும், சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பை சேர்ந்தவர்களும், கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.

இது போன்ற தொடர் தாக்குதல்களால் கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது எனக்கு தெரியவந்துள்ளது. ஹிந்துக்கள் விழிப்புடன் அமைதியாக இருக்க வேண்டும். தங்களுக்கு எதிரான குற்றங்களை போலீசில் புகார் அளிக்க வேண்டும்.

காலிஸ்தான் இயக்கத்தினர், ஹிந்துக்களை தூண்டிவிட சதி செய்கின்றன. இதன் மூலம் ஹிந்துக்கள் சீக்கியர்கள் இடையே பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் நினைக்கின்றன. கனடாவில் வசிக்கும் பெரும்பான்மையான சீக்கிய சகோதரர், சகோதரிகளுக்கு காலிஸ்தான் இயக்கத்தை பிடிக்கவில்லை. சில காரணத்திற்காக, அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில் கனடாவில் வசிக்கும் ஹிந்துக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே குடும்ப ரீதியிலான உறவு மற்றும் கலாசார உறவுகளை கொண்டிருந்தனர்.

கனடாவில் சட்டத்தின் ஆட்சி நிறுவப்படுவதை உறுதி செய்கிறோம். அதேநேரத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்துவதுடன், ஒரு மதத்திற்கு எதிராக வெறுப்பு குற்றங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்பது எனக்கு புரியவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (8)

 • Mohan das GANDHI - PARIS,பிரான்ஸ்

  CANADA BECOME TERRORISTS SUPPORTING COUNTRY. SHAME ON PM JUSTIN TRUDEAU HE IS UNFIT TO BE AS PM OF CANADA. LAW AND ORDER FAILED DUE TO SIKH KHALISTHAN TERRORISTS OVER BRUTALS AND TERRORISM ACTIVITIES IN CANADA AND IN INDIA TOO ? ? ? THESE KHALISTHAN TERRORISTS ARE FINANCED BY JUSTIN TRUDEAU AND PAKISTHAN ISI IS REALITY. BECAUSE SAJJAN SING WHO IS DEFENCE MINISTER ACTUEL JUSTIN TRUDEAU FRIEND WHO IS IN EXILE IN CANADA EX-MEMBER IN KHALISTHAN AND VERY GOOD FRIEND TO THE WANTED TERRORISTS LEADER OF KHALISTHAN MOMENT CALLED BHINDHREN WALE SINGH. TRUDEAU SHOULD RESIGN HIS PM POWER SHAME ON ஹிம் AND THE LIBERAL PARTY TOO. ALL ARE NOT TRUE LEADERS IN CANADA.

 • kulandai kannan -

  தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும், இலங்கையில் சிங்களக் கட்சிகளும் செய்யாததா??

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கனடா பிரதமர் ரூடோ நம் நாட்டில் உள்ள ஒரு சில தேசதுரோகிகளாலும், நமது எதிரி நாடுகளாலும் வழி நடத்தப்படுகிறார். அவர் தான் செய்யும் தவறை உணர்ந்து, இந்தியாவின் உதவியை பெற்று, அங்குள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு கலையவேண்டும். அவர்கள் அங்கு இருக்கும் வரை கனடா நாட்டில் உள்ள மக்கள் அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழவே முடியாது.

 • A1Suresh - Delhi,இந்தியா

  ஹிந்துக்களும் சீக்கியர்களும் (மற்றவர்களும் ) - கனடா நாட்டில் 3% ஆன உடனே சிக்கியர்கள் அப்பாவி ஹிந்துக்களை நாட்டை விட்டு போக சொல்கின்றனர் . ஹிந்து கோயில்களில் தாக்குதல் நடத்துகின்றனர் . சில ஹிந்து தலைவர்களை கொல்கின்றனர். நிதி சேகரிக்க ஆயுத கடத்தல், போதை மருந்துகள் , ஆள்கடத்தல் என்று சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அங்கிருக்கும் அரசியல்வாதிகளை ஓட்டு அரசியல் ஆசை காட்டி வளைத்து போடுகின்றனர் மக்களே சிந்தியுங்கள் . ஹிந்துக்கள் உலகின் எந்த நாட்டில் வசித்தாலும் சரி அவர்கள் பாரதத்தில் என்னதான் பெரும்பான்மையினராக இருந்தாலும் சரி ஒருபொழுதும் இப்படி கொடுங்கோல் செயல்கள் புரிந்ததில்லை செய்யப் போவதுமில்லை . மற்ற மதத்தினரை சகோதார சகோதாரிகளாக மதிக்கின்றனர். அவர்கள் தரும் மத பிரசாதங்களை ஏற்று சாப்பிடுகின்றனர் . மற்ற மதத்து கடவுளரையும் மதிக்கின்றனர் . அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெருவில் பிற மதத்தவரை எந்த தொந்தரவும் செய்வதில்லை . ஆனால் அந்த ஹிந்துக்களைத் தான் இந்த திராவிடியா அரசாங்கம் துன்புறுத்துகிறது. பிள்ளையார் சதுர்த்தி துவங்கி சரஸ்வதி பூஜை, தீபாவளி -கிருஷ்ணஜெயந்தி என்று அனைத்து பண்டிகைகளையும் இகழ்கின்றனர் . அது போகட்டும் சித்திரை வருட பிறப்பையும் தைமாசம் என்று மாற்றுகின்றனர் . மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் இவர்கள் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை . ஹிந்து கோயில்களில் அறநிலையத்துறை என்ற பெயரில் நுழைந்து அராஜகம் செய்கின்றனர். இப்படி அட்டகாசம் செய்யும் மற்ற மதத்தினர் நம் மீது வீண்பழி சுமத்துகின்றனர். எனவே யார் உண்மையான சகோதரத்துவம் , சமத்துவம் கொண்ட மதத்தினர் என்ற உண்மையை உணர்ந்தால் மகிழ்ச்சி

 • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

  இங்கே ட்ரூடோ மாடல். அது ஏறக்குறைய திராவிட+காங்கிரஸ் மாடல்தான்.. தங்கள் சுய ஆதாயத்துக்காகத் தேடிப்பிடிச்சு சிறுபான்மை, சமூக நீதி என்ற பெயரில் விஷ நாகங்களுக்குப் பால் வார்க்கும் கும்பல்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்