ADVERTISEMENT
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பார்லி., கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் பார்லிமென்டை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று பார்லிமென்டை கலைத்து, அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். பார்லி., கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
ஊழல் வழக்கில் ,இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறும்பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் இருந்து வருகிறார். பார்லி., கலைக்கப்பட்டு 90 நாட்களில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பார்லி., கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
இம்ரான் கான் இல்லாமல் போயிட்டாரே/ இம்ரான் இருந்தால் ஷரிப்ப் பிளாவல் ஒருத்தருக்கும் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது
நம்ம கீ ஓசி சோறு மணிய அனுப்புங்க..... அவன்தான் லாயக்கி
தேர்தல் நடத்த செலவுக்கு பணம் எந்த நாட்டிடம் கடன் கேட்பது என்று பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது. 😏😜🤣
மூர்க்கமே ஆளும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தலைமை பிச்சைக்காரர் தேர்வு என்று சொல்லாம். இல்ல தலைமை தீவிரவாதி தேர்வு என்றும் சொல்லலாம்.