மதுரையில் நடந்த திமுக விழா ஒன்றில் உதயநிதி பேசியதாவது: நான் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இதே மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. நான் எந்த மாநாட்டை சொல்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். வரலாற்றுலே அப்படி ஒரு மாநாடு நடக்க கூடாது என்றால், அந்த மாநாட்டை உதாரணமாக சொல்லலாம்.
நீட் தேர்வு ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்லி முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கேட்டுள்ளார். நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய போராடி கொண்டிருக்கிறோம். சட்டசபையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினோம். நீட் தேர்வால் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
"ஜிரோ" மார்க்
நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெரச்ன்டைஸ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. "ஜீரோ" மார்க் வாங்குறது தகுதியா?. இப்படிப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு தான் இருக்கும். உதயநிதி மட்டும் போராடினால் பத்தாது.
அத்தனை பேரும் களத்தில் இறங்கி போராட வேண்டும். ஆர்.பி உதயக்குமார் நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேட்க சொல்கிறார்?. நான் இப்போது சொல்கிறேன், திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைக்கிறேன். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு திராணி இருந்தால் திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இட முடியுமா?.
சிஏஜி அறிக்கை
பாஜ., ஆட்சி 9 ஆண்டுகாலமாக நடந்த அனைத்து ஊழல்களையும் சிஏஜி அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், செத்துப்போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் திமுக ஆட்சியில் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ்கிறது என கூறுகிறார்.
ஆமா திமுக ஆட்சியில் வாழ்கிறது கருணாநிதி குடும்பம் தான். கருணாநிதி குடும்பம் என்பது ஒட்டு மொத்த தமிழகமும் ஆகும். மகளிர் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொன்னோம் அதே மாதிரி கொடுத்து விட்டோம். பாஜ., ஆட்சியை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
வாசகர் கருத்து (49)
உதயநிதி ஒரு மோசமான உதவாக்கரை மனிதன், இவன் அப்பனையே கேவலமான நடவடிக்கையில் மிஞ்சுகிறான்
நடிகர் செந்தில்: அண்ணே, நான் 8 ஆம் கிளாஸ் பாஸ். நீங்க 10 ஆம் கிளாஸ் பெயிலு . பாஸ் பெரிசா இல்லை பெயிலு பெரிசா? நாம இந்த லெவெலில் படிப்பு பத்தி பேசினா போதும்.
...... வருங்காலங்களில் வரும் ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க. வுக்கே ஓட்டு போடுங்கள். அப்போதுதான் அடுத்தடுத்து வரும் தேர்தல் வரையில் "நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக தொடர்ந்து போராடும்":
அப்பப்போ நல்ல காமெடி பன்றார். சினிமாவில் காமெடியன் ஆகி இருந்தால் மற்ற எல்லா காமெடி நடிகர்களும் மார்க்கெட் அவுட் ஆகி இருப்பார்கள்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமின்றி வஞ்சணை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி, நீங்கள் நீட்டை எதிர்த்துப் போராடுவதாக சொல்லி பதவிக்கு வரவில்லை, நீட்டை விலக்கும் சூட்சுமம் தெரியுமென்று பொய் பித்தலாட்டம் பண்ணி நம்ப வைத்து மக்களை களுத்தறுத்து விட்டீர்கள்.