Load Image
Advertisement

"ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு": நிதிஷ்குமார் விருப்பம்

 We also want a caste-based census in the country, and we have been demanding about it from a very long time, says Bihar CM Nitish Kumar "ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு": நிதிஷ்குமார் விருப்பம்
ADVERTISEMENT
பாட்னா: "ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம்" என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறார்கள். அதை உடனடியாக அமல்படுத்தியிருக்கலாம். 2024 வரை காத்திருக்க வேண்டியது ஏன்?. அதில் பாஜ.,வுக்கு என்ன பிரச்னை?. மகளிர் இடஒதுக்கீடு விஷயம் நன்றாக இருக்கிறது. அது எப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறதோ அப்போது பெண்களுக்கு நல்லது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை பத்து வருடங்களுக்கும் ஒரு முறை நடத்தி இருக்க வேண்டும். கணக்கெடுப்பு எடுப்பதில் தாமதமானது இதுவே முதல் முறை. இது நல்லதல்ல. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (12)

  • அப்புசாமி -

    கணக்கு வழக்கில்லாம வது வதன்னு இருக்காங்க. உத்தேசமா ஒரு 150 கோடி வெச்சுக்கோங்க. அந்த பாஞ்சிலட்சம் போட்டிருந்தால் வங்கிக்.கணக்கு விவரங்களை வெச்சு உடனே சொல்லியிருக்கலாம்.

  • kulandai kannan -

    என்ன அவசியம்? இவர் பிடுங்க நினைக்கும் ஆணியை இப்போதே பிடுங்கலாமே!!

  • sankar - Nellai,இந்தியா

    "ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம்"- கிழிஞ்சு போச்சு

  • enkeyem - sathy,இந்தியா

    சாதி சமயமற்ற சமுதாயத்தை ஏற்படுத்துவோம் என்று தொண்டை கிழிய கத்துகிறீங்க. அப்புறம் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்கிறீங்க. என்னய்யா பித்தலாட்டம் இதெல்லாம்? இதுதான் நீங்கள் சாதி ஒழிக்கும் லட்சணமா?

  • Suppan - Mumbai,இந்தியா

    கோவிட் பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். நிதிஷுக்கு மட்டும் தெரியவில்லை. ஹா ஹா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்