Load Image
Advertisement

கனமழை பெய்ய வாய்ப்பு: 13 மாவட்ட மக்களே உஷார் !

Today weather News: Chennai weather , TNWeather:Chance of heavy rain in 13 districts of Tamil Nadu: Alert people!    கனமழை பெய்ய வாய்ப்பு: 13 மாவட்ட மக்களே உஷார் !
ADVERTISEMENT

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று(செப்., 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(செப்.,21) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

அதேபோல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை( செப்.,22)





கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை( செப்.,22) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 23 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (3)

  • பெரிய ராசு - Arakansaus,இந்தியா

    தென்காசியில் ஒரே ஒரு சொட்டு தான் அப்படிக்க போயிடுத்து

  • குமரி குருவி -

    அப்படா மழை பெய்யும்மாவட்டத்தில் கன்னியாகுமரிபெயரும் இருக்கு ஐ ஜாலிதான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்