Load Image
Advertisement

மீண்டும் உயிர்த்தெழுமா சந்திரயான்-3 ரோவர்?: விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு

பெங்களூரு: நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் விண்கலம் மீண்டும் உயிர்த்தெழுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. நிலவில் பகல் பொழுது நாளை (செப்.22) துவங்க உள்ளது. தற்போது நிலவின் சிவசக்தி பகுதியை நோக்கி சூரிய ஒளி வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Latest Tamil News


சந்திரனில் தரையிறங்கி ஆராய்வதற்காக, ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், 'சந்திரயான் - 3' விண்கலத்தை செலுத்தியது. இதன், 'விக்ரம் லேண்டர்' ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6:04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அறிவியல் உலகில், 'சந்திரயான் - 3' வெற்றி மிகப்பெரிய உச்சத்திற்கு நம் நாட்டை உயர்த்தியது.

நாளை(செப்.,22) பகல் பொழுது





லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்தன. இந்நிலையில், 14 நாள் கழித்து நிலவில் பகல் பொழுது முடிந்ததால் லேண்டரும், ரோவரும் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டன. இந்த சூழலில் நிலவில் பகல் பொழுது நாளை (செப்.22) மீண்டும் துவங்க உள்ளது. பகல் துவங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பு





லேண்டர் மற்றும் ரோவர் விண்கலம் மீண்டும் உயிர்த்தெழுமா என இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதீத குளிர் நிலவும்.

அதை தாங்கும் அளவுக்கு சந்திரயான்-3 விண்கலன்கள் கட்டமைக்கப்படவில்லை. தற்போது நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்லீப் மோடுக்கு சென்றபோது முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Tamil News

செயல்பட வில்லை என்றால் என்ன நடக்கும்?





நிலவில் நாளை(செப்.,22) சூரிய ஒளி மீண்டும் வரும்போது, ரோவரும், லேண்டரும் வேலை செய்யவில்லை என்றால், அவை எப்போதும் செயல்படாது. ஏனெனில் அவை தயாரிக்கப்பட்ட போது, ​​அவற்றின் ஆயுட்காலம் 14 நாட்களுக்கு வடிவமைக்கப்பட்டது. செயல்படாத விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரால் நிலவின் மேற்பரப்பில் கழிவுகளாக மாறமுடியுமே தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    எழுந்தா பெரீவருக்கு மெடலு. எழலைன்னா நேருதான் காரணம். போய் தூங்குங்க.

  • jagadeesh. b -

    6 மாதம் மட்டுமே வேலை செய்யும் என்ற சந்திரயான் 2 இத்தனை ஆண்டுகள் வேலை செய்ய வில்லையா, விக்ரமும் உறக்கம் கலைந்து பணிக்கு திரும்பும் என நம்புவோம்

  • Thetamilan - CHennai,இந்தியா

    எதற்க்காக அப்படி உருவாக்கப்பட்டது அப்படி செய்யும். இதில் என்ன குழப்பம், பிரச்சாரம், பயம் வேண்டியுள்ளது ? புரளியை கிளப்ப வேண்டியுள்ளது ?. இஸ்ரோகாரர்கள் அப்படி ஏதாவது கூறினார்களா?. சந்தேகம் கிளப்பினார்களா?

  • R Kay - Chennai,இந்தியா

    Let's hope for the best Next mission shall have an nate source of power in addition to solar cells to extend the longevity of the mission.

  • P.R.Rajendra Kumar - Madurai,இந்தியா

    நாமும் இஸ்ரோவுடன் சேர்ந்து ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்