Load Image
Advertisement

கோடநாடு வழக்கில் பழனிசாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை

Chennai High court: Interim ban on Minister Udayanidhi to talk about Palanisamy in Kodanadu case   கோடநாடு வழக்கில் பழனிசாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்கால தடை
ADVERTISEMENT

சென்னை: கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறாக பேச அமைச்சர் உதயநிதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் 'தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னை பற்றி அவதூறாக அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார். தன்னை பற்றி உதயநிதி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடுவது வழக்கம் தான் என்றாலும், தனிப்பட்ட முறையில் அவதூறாக இருந்தால் மேற்கொண்டு பேசுவதற்கு தடை விதிக்க முகாந்திரம் உள்ளது' எனக் கூறி, கோடநாடு வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி உதயநிதி பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 2 வாரத்தில் உதயநிதி பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (15)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    சிறுபையன் யேதாவது பேசிக்கொண்டு திரியும்

  • Thetamilan - CHennai,இந்தியா

    இவர்களுக்கு எதிராக எதுவும் பேசக்கூடாது. கொடநாடு வழக்கில் பழனிச்சாமிக்கு தொடர்பில்லையெனில் பத்தாண்டுகளாக வலக்கை குழி தோண்டி புதைத்தாது ஏ ன் ?. அதற்க்கு கோர்ட்டுகள் துணை போனது ஏன் ?. கோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசியல் சட்டத்தில், ஜனநாயகத்தில் ஆளில்லையோ ?

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    மான நஷ்ட வழக்குகள் போட்டே கோடீஸ்வரர் ஆகி விடுவாரோ?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    Oreyadiyaaka. Ivar. Ethuvume. Pesakkoodaathu. Enru. Thadai. Vithiththaal, Katchi. Pizhaikkum Aatchi. Pizhaikkum

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    திமுக வழக்கறிஜர்கள் குற்றவாளிக்கு ஆஜர் ஆனது ஏன் ??????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்