Load Image
Advertisement

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் கருத்து கணிப்பு: 2வது இடத்தில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி


வாஷிங்டன்: அமெரிக்காவில் 2024ம் ஆண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்து, நடந்த கருத்து கணிப்பில், இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும், முதல் இடத்தை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும் பிடித்துள்ளனர். சமீப காலமாக விவேக் ராமசாமிக்கு குடியரசு கட்சியினரிடையே ஆதரவு உச்சம் தொட்டும் வருகிறது.

Latest Tamil News

அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அதேபோல், அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, 38, நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்காக, ஆதரவு திரட்டி வருகின்றனர். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆதரவு திரட்டும் டிரம்ப்





இதற்கான உட்கட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் குடியரசு கட்சியினரிடையே தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். அதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அமெரிக்கா முழுவதும் பயணித்து குடியரசு கட்சியினரை சந்தித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

கருத்து கணிப்பு





இது தொடர்பாக, சி.என்.என் பல்கலைக்கழகம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு குடியரசு கட்சியினரிடையே ஆதரவு உச்சம் தொட்டும் வருகிறது.

Latest Tamil News

முழு விபரம்:





அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்பிற்கு குடியரசு கட்சியின் 39 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13 சதவீத ஆதரவுடன் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

மற்றொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12 சதவீத ஆதரவுடன் 3வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11 சதவீத ஆதரவுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.



வாசகர் கருத்து (5)

  • nizamudin - trichy,இந்தியா

    டிரம்ப் கு அதிக வாய்ப்புள்ளது

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    வலதுசாரிகளின் கூற்றுப்படி, வெளிநாட்டான் இந்தியாவை ஆளக்கூடாது. தல ஆளும் தாய்நாட்டில்/அகண்ட பாரதத்தில் வாழாத , சாத்திர விரோதமாகக் கடல் கடந்து செல்லும்

  • செந்தமிழ் கார்த்திக் - Madurai to Chennai ,இந்தியா

    விவேக் ராமசாமிக்கு வாய்ப்பில்லை. அமெரிக்காவின் நிற வெறி கொள்கை பற்றி உலகிற்கே தெரியும். அதுவும் அவர் சார்ந்த கட்சி அதற்கு பெயர் போன கட்சி. விவேக்கிற்கு இந்தியர்களே ஆதரவு தர மாட்டார்கள். காரணம் H1B விசாவை தடை செய்வேன் என்று கூறியதால். ஆகவே அவருக்கு நடப்பதை பேசுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்