ADVERTISEMENT
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை : மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்யம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது.
நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது.
பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது.
நீட் தேர்விற்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறோம். இது எந்த உண்மையான தகுதி அளவுகோலும் இல்லாமல் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது.
பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (16)
ஏதாவது புரியுமா? நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் நிராகரித்த, கடைநிலை கல்லூரிகளில் (அண்ணா பல்கலை கழகங்களில் இறுதியில் நிரப்படாத இடங்கள் உள்ளது போல) இருக்கும் மிச்ச சொச்ச இடங்கள் இவை. எதுவும் தெரியாது, சுட்டுப்போட்டாலும் புரியாது. ஆனால், மனதுக்குள் எல்லாம் தெரிந்த மாமேதை என்ற நினைப்பு.
நீட் தேர்வின் பலன் பூஜ்யம் . உண்மைதான் . ஆனால் யாருக்கு ? தனியார் மருத்தவ கல்லூரிகளை நடத்துவபர்களுக்கு நீட் தேர்வு ஆப்பு வைத்துவிட்டது என்பது உண்மைதானே
அடிப்படை தெரியாத ஸ்டாலின் . அவருக்கு எழுதிக்கொடுக்கும் ஆளுக்கும் அறிவில்லை . நீட் தேர்வுகள் இன்னும் நன்றாக நடக்க அனைத்து தனியார் கல்லூரிகளையும் நாட்டுடமை ஆக்க வேண்டும் .
முதல்ல செய்தியை ஒழுங்கா படிச்சி கருத்து போடுங்க. கடுப்பேத்துறாங்க மை லார்ட்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பலன் பூஜ்யம்...உங்களுக்கு தானே?