Load Image
Advertisement

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை: 2017ல் இந்தியாவில் இருந்து தப்பியவன்

Another Khalistan terrorist killed in Canada: 2017 escapee from India   கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை: 2017ல் இந்தியாவில் இருந்து தப்பியவன்
ADVERTISEMENT

ஒடாவா: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன் 2017ல் இந்தியாவில் இருந்து தப்பி சென்று கனடாவில் தலைமறைவானவன்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையில் இன்று மோதல் வெடித்துள்ளது. அப்போது பயங்கரவாதி சுக்தூல் சிங் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டான். 2017ல் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்த சுக்தூல் சிங்கை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்தது. இந்த நிலையில் இன்று பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து (52)

  • சுலைமான் -

    இதே போன்று தமிழகத்தில் ஒரு கூமுட்டை பிரிவினைவாதி உள்ளான்.... செபஸ்டியன் சைமன்...மற்றொருவன் ஆண்டிமுத்து மகன்... இன்னொருவன் வளவனு. அவர்களையும் கொஞ்சம் களையெடுங்களேன்

  • Ranga - பாண்டிய நாடு, தமிழக ஒன்றியம். பாரதம்.,இந்தியா

    திரு. மோடியின் ஆட்சியில்தான் இந்தியர்களுக்கும் சூடு சொரணை உண்டு என்று உலகம் உணர்ந்துள்ளது. அதேபோல தமிழக மக்களுக்கும் சூடு சொரணை உண்டு என்பதை திரு.அண்ணாமலை அவர்கள் ஆட்சி அமைத்து உணர்த்த வேண்டும்.

  • S.kausalya - Chennai,இந்தியா

    தீவிர வாதத்தை வேரறுக்க இங்கு அஜித் தோவல் வருவார். ஆனால் இங்கு இருக்கும் விபசார ஊடகங்கள் முதலில் அவரின் சாதியை குறித்து பேசும். பின் குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசும். கடைசியாக இவர் தமிழ்நாட்டை ஆரிய மயமாக்கி நம்மை இங்கிருந்து விரட்ட வந்து உள்ளார் என்று சொல்வார்கள். நம் முட்டாள் தமிழ் மக்களும் என்ன ஏது என்று ஆராயாமல் இந்த விபசார ஊடகங்களை அப்படியே நம்பி மறுபடியும் திராவிட கழகங்களின் பின்னே போவார்கள். இதில்.தி.மு.க வின் ஒப்பாரி அதிகமாக இருக்கும். பணம் இலவசம் என மறுபடியும் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருவார்கள். இப்போது பார்க்கலாம் மகளிர் உரிமை தொகை என்பது மக்களின் வரிப்பணத்தில் இருந்து மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன் பெற்று அல்லது வேறு நலத்திட்டத்தின் மத்திய அரசு தந்த நிதியை மடை மாற்றம் செய்து தான் ஸ்டாலின் அரசு தருகிறது என்று தெரியாமல் ஏதோ இவரே அவரின் சொந்த பணத்தை கொடுப்பது போல் எண்ணி வாங்கி மகிழ்கிறார்கள். முட்டாள் தமிழக மக்களிடம் ,,தோவல் எடுபடமாட்டார்

  • Gnanam - Nagercoil,இந்தியா

    இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பான காலிஸ்தானுக்கு எப்படி கனடா அடைக்கலம் கொடுத்து துணை நிற்கிறது. பயங்கரவாதத்தை கனடா ஆதரிக்கிறதா? அப்படி ஆதரிப்பதென்றால், கனடாவிலேயே காலிஸ்தானுக்கு ஒரு இடம் ஒதுக்கி கொடுக்கலாமே.

  • R Kay - Chennai,இந்தியா

    தீவிரவாதிகளின் புகலிடங்கள் அமைதியாய் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. கனடா விரைவில் பாடம் கற்றுக்கொள்ளும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்